கமிட்டி அறிக்கையை முழுமையாக நிராகரிக்க வேண்டும்- ப.சிதம்பரத்துக்கு கண்டனம்!

மாநிலங்களுக்கான பெரிய பெரிய மொத்த நிதி ஒதுக்கீடு, 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை அமைக்கப்படும். நிதிக் கமிஷனின் பரிந்துரை அடிப்படையில்தான் இருக்க வேண்டியது அவசிய மாகும்.
அதை விடுத்து மத்திய நிதி அமைச்சர் ஒரு கமிட்டியை அமைத்து, உத்தரவிடுவது என்பது நிதிக் கமிஷனின் சட்டத்துக்குட்பட்ட நடவடிக்கையாக இருக்க முடியாது.
எனவே டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கையை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். அந்த அறிக்கை பரிந்துரைகளை எந்த வடிவத்திலும் அமல் படுத்தக் கூடாது.
வளர்ச்சி அடையாத மாநிலங்களுக்கு அதிக நிதி கொடுப்பதால் பயன் இல்லை. ஆகையால் 14-வது நிதிக்குழுவை சுதந்திரமாக செயல்பட விட வேண்டியது அவசியமாகும்.
14-வது நிதிக்குழுவின் பணியில் மத்திய நிதி அமைச்சரும், மத்திய நிதி அமைச்சகமும் குறுக்கிட முயற்சி செய்வதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications