என்னை அம்மு என்று பாசத்தோடு அழைத்தவர் மனோரமா: ஜெயலலிதா நேரில் அஞ்சலி
சென்னை: மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
12 வயதில் இருந்து நடித்துக் கொண்டிருந்த மனோரமா தனது 78வது வயதில் மரணம் அடைந்தார். சென்னை தி. நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் அவரது தோழி சசிகலாவும் வந்து மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பிறகு ஜெயலலிதா செய்தியாளர்களிம் கூறுகையில்,
மனோரமா ஒரு பெண் நடிகையர் திலகம். அவரின் மரணம் ஈடு இணையில்லாத இழப்பு ஆகும். மனோரமாவை போன்று ஒரு சாதனையாளர் இதற்கு முன்பு இருந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை. அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை எந்த காலத்திலும் யாராலும் நிரப்ப முடியாது.
அவர் என்னை அன்போடு அம்மு என்று தான் அழைப்பார். அவர் எனக்கு பலமுறை பாசத்தோடு உணவு பரிமாறி உபசரித்தவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மனோரமா மீது தனிப்பாசம் உண்டு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மனோரமாவின் நடிப்பு பற்றி என்னிடம் புகழ்ந்து பேசியது உண்டு. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications