For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சி நிர்வாகத்துக்கு உதவி ஷீலா- காவல் நிர்வாக உதவிக்கு நடராஜ்... ஜெ. போட்ட பக்கா பிளான்!

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தனக்கு நிச்சயம் சாதகமாக தீர்ப்பு வராது என்று முன்பே ஜெயலலிதா ஊகித்து விட்டதால், சில மாதங்களுக்கு முன்பே அவர் அதிமுகவின் அடுத்த அரசை தீர்மானித்து வைத்து விட்டதாக கூறுகிறார்கள்.

ஓ.பன்னீர் செல்வம்தான் தனது அடுத்த வாரிசு என்பதையும் தீர்மானித்து அதை அவரிடமும் ஏற்கனவே கூறி விட்டாராம் ஜெயலலிதா. அதேபோல தான் சிறைக்குப் போய் விட்டால் ஓ.பன்னீர் செல்வத்தை தான் வழி நடத்திச் செல்வது கடினம் என்பதால் அதற்கேற்ப வேறு சில திட்டமிடல்களையும் பக்காவாக முன் கூட்டியே செய்து வைத்து விட்டாராம்.

இதனால் ஜெயலலிதாவின் நோக்கங்களை, திட்டங்களை ஓ.பன்னீர் செல்வம் சிக்கலின்றி நிறைவேற்ற, ஆட்சியை வழி நடத்த வழி ஏற்பட்டுள்ளதாம்.

தீர்ப்பை எதிர்பார்த்து

தீர்ப்பை எதிர்பார்த்து

இந்தத் தீர்ப்பை மக்கள்தான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஜெயலலிதா எதிர்பார்த்துள்ளார். வழக்கின் போக்கும், தனக்கு பாதகமாக அம்சங்கள் வலுத்து வந்ததையும் உணர்ந்த அவர் முன்கூட்டியே சில திட்டமிடல்களை நடத்தியுள்ளார்.

முதல்வர் பதவி பறிபோனால்

முதல்வர் பதவி பறிபோனால்

முதலில் முதல்வர் பதவி பறிபோனால் தனக்கு அடுத்து ஆட்சியை தலைமை தாங்குவது யார் என்பதை ஜெயலலிதா தீர்மானித்துள்ளார். 2 மாதங்களுக்கு முன்புதான் அதைச் செய்துள்ளார் ஜெயலலிதா. ஓ.பன்னீர் செல்வம் மட்டுமே அவரது மனதில் அடுத்த முதல்வராக மாற்றுக் கருத்தின்றி தெரிந்துள்ளார். தனது முடிவையும் பன்னீரிடமே கூறி தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி விட்டாராம்.

ஆலோசகர்கள்

ஆலோசகர்கள்

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா பதவி விலகி ஓ.பன்னீ்ர் செல்வம் முதல்வர் பதவிக்கு வந்தபோது, ஜெயலலிதா கைதாகவில்லை. மாறாக வெளியில்தான் இருந்தார். எனவே அவரே நேரடியாக பன்னீர் செல்வத்தை வழி நடத்தினார். ஏன் கோப்புகளைக் கூட அவர் பார்வையிட்டார் என்று கூறுவார்கள்.

பக்கா ஆலோசகர்கள்

பக்கா ஆலோசகர்கள்

ஆனால் இம்முறை தான் சிறைக்குச் செல்லநேரிடும் என்பதே முன்கூட்டியே ஊகித்து விட்ட ஜெயலலிதா அதற்கேற்ப திட்டங்களை வகுத்து வைத்து விட்டார்.

ஆட்சி நிர்வாகத்திற்கு ஷீலா பாலகிருஷ்ணன்

ஆட்சி நிர்வாகத்திற்கு ஷீலா பாலகிருஷ்ணன்

அதன்படிதான் ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளரான ஷீலா பாலகிருஷ்ணனை தனது செயலாளராக்கி அருகில் வைத்துக் கொண்டார். அவருக்கு ஆட்சி நிர்வாகம் குறித்த அத்தனை விவரங்களும் அத்துப்படி என்பதாலும், தனக்கு மிகவும் விசுவாசமானவர், நேர்மையானவர், அனுபவஸ்தர், அதிகாரிகளிடம் கெட்டிக்காரத்தனமாக வேலை வாங்கக் கூடிய திறமையாளர் என்பதால் அவரை பக்கத்தில் வைத்துள்ளார். மேலும், தான் சிறைக்குச் செல்ல நேரிட்டால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆட்சி நிர்வாகத்தில் நீங்கள்தான் ஆலோசனை கூறி வழி நடத்த வேண்டும் என்று ஏற்கனவே ஷீலாவிடமும் கூறி விட்டாராம் ஜெயலலிதா.

காவல் நிர்வாகத்திற்கு நடராஜ்

காவல் நிர்வாகத்திற்கு நடராஜ்

அதேபோல அரசின் முக்கிய அம்சங்களில் இன்னொன்று காவல்துறை நிர்வாகம். இதற்கு ஜெயலலிதா போன்ற கெட்டிக்காரத்தனமான தலைவர்களால் மட்டுமே சரிவர செய்ய முடியும். ஓ.பன்னீர் செல்வத்தால் நிச்சயம் அதில் திறம்பட செயல்பட முடியாது. எனவேதான் தனது இன்னொரு விசுவாசியும், நேர்மையானவர், திறமையானவர் என்று அறியப்பட்ட ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி நடராஜை கட்சியில் இணைத்துக் கொண்டார் ஜெயலலிதா. அவர்தான் தற்போது ஓ.பன்னீர் செல்வம் அரசுக்கு காவல்துறை நிர்வாகம் குறித்த ஆலோசனைகளை வழங்கப் போகிறார் என்கிறார்கள்.

கட்சி நிர்வாகத்திற்கு வழக்கம் போல நால்வர் குழு

கட்சி நிர்வாகத்திற்கு வழக்கம் போல நால்வர் குழு

அதிமுக நிர்வாகத்தை மேற்கொள்ள ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வாதன் உள்ளிட்ட நால்வர் குழு நியமிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

ஜெயலலிதா வெளியில் வரும் வரை

ஜெயலலிதா வெளியில் வரும் வரை

ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வரும் வரை இந்த செட்டப் நீடிக்குமாம். வெளியில் வந்த பிறகு அவரே நேரடியாக விவகாரங்களை கையில் எடுத்துக் கொண்டு ஓ.பன்னீர் செல்வம் அரசை வழிநடத்துவார் என்று கூறுகிறார்கள்.

English summary
ADMK leader Jayalalitha had planned all the key issues well before the verdict date, say sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X