Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தை நீங்கள் குட்டிச்சுவராக்கி விட்டீர்கள்.. சட்டசபையில் ஜெயலலிதா ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மின்சார நிலைமை குறித்து சட்டசபையில் இன்று நடந்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா திமுக ஆட்சியில்தான் தமிழக மின்துறையை குட்டிச் சுவராக்கினார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஒளிமயமான மாநிலமாக அதை மாற்றியதாக ஆவேசமாக கூறினார்.

சட்டசபையில் இன்று மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசும்போது இவ்வாறு கடுமையாக சாடினார்.

சட்டசபையில் அதிமுக உறுப்பினர்கள் சரியான பதிலடி தருவதால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து விட்டதாகவும் ஜெயலலிதா கூறினார். இன்று நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் பேசும்போது கூறியதாவது:

உண்மைத்தோற்றம்தான்

உண்மைத்தோற்றம்தான்

நான் உள்ளே வந்து கொண்டிருந்தபோது, உறுப்பினர் பேசிக்கொண்டிருந்தபோது, ‘தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்றொரு மாயத் தோற்றத்தை நீங்கள் ஏற்படுத்தப் பார்க்கிறீர்கள் என்றார். அந்த மாயத் தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கிறீர்கள் என்ற சொற்றொடரை திரும்பத் திரும்ப சொன்னார். நாங்கள் அந்த மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை.

மின் உபரி மாநிலம்

மின் உபரி மாநிலம்

மத்திய மின்சாரக் குழுமம் தனது தமிழ்நாடு மின்சார உற்பத்தியில் உபரி மாநிலம் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இது, இந்தியாவிலுள்ள அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சேம் சைடு கோல்

சேம் சைடு கோல்

மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை எல்லாம் எங்களது ஆட்சிக் காலத்தில் போடப்பட்டதாக அவர் சொல்லுகின்றபோது, கால்பந்து விளையாடத் தெரியாத ஒருவர், திரும்பத் திரும்ப சேம்சைடு கோல் அடிப்பது போல் இருக்கிறது என்பதைத் தங்கள் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன். (ஜெயலலிதா இவ்வாறு கூறியபோது மேஜை பலமாக தட்டப்பட்டது)

கொள்கை விளக்கக் குறிப்பு

கொள்கை விளக்கக் குறிப்பு

ரங்கநாதன் கொள்கை விளக்கக் குறிப்பை படித்திருந்தால், தமிழ்நாடு மின்மிகை மாநிலமா, இல்லையா என்ற குழப்பம் அவருக்கு வந்திருக்காது. கொள்கை விளக்கக் குறிப்பில் பக்கம் 3 மற்றும் 4-ஐ இப்போது நான் படிக்கிறேன். இது இன்றைக்கு வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பு.

மின்சார உற்பத்தி

மின்சார உற்பத்தி

2010 ஆம் ஆண்டில் சராசரியாக ஒரு நாளைய மின்சார பயனீடு 200 மில்லியன் யூனிட் அளவாக இருந்தது. தற்போது 2016 ஆம் ஆண்டில் 300 மில்லியன் யுனிட் அளவாக உயர்ந்துள்ளது. மேலும், 29-4-2016 அன்று தமிழ்நாடு உச்சகட்ட மின் தேவையான 15,343 மெகா வாட் அளவையும் மற்றும் உச்ச மின் பயனீட்டளவான 345.617 மில்லியன் யூனிட் பூர்த்தி செய்தது.

கூடுதல் மின் உற்பத்தி

கூடுதல் மின் உற்பத்தி

இதுதவிர, மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டு மின் தேவை, மின் உற்பத்தி சமன்பாட்டு அறிக்கையில் 2016-2017 ஆம் ஆண்டில் தமிழகம் 11,649 மில்லியன் யூனிட் அளவிற்கு கூடுதலாக உற்பத்தி செய்து மின்மிகை மாநிலமாக திகழும் என்று திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குட்டிச்சுவர்

குட்டிச்சுவர்

மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி இருந்தபோது மின்சாரத் துறையில் என்னென்ன தவறுகள் செய்ய முடியுமோ எல்லாவற்றையும் செய்து மின்சாரத் துறையையே குட்டிச் சுவராக்கினார்கள். அவர்கள் செய்தது எல்லாம் தவறு. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு 2011 முதல் 2016 வரை தி.மு.க செய்த தவறுகளையெல்லாம் சரி செய்தோம்.

ஒளிமயமான தமிழகம்

ஒளிமயமான தமிழகம்

இருட்டில் மூழ்கியிருந்த தமிழ்நாட்டை நாங்கள் ஒளிபெறச் செய்தோம். ஒளிமயமான மாநிலம் ஆக்கினோம். இன்றையதினம் மின்சாரத் துறை சம்பந்தமாக அவர்கள் என்ன குற்றச்சாட்டு சொல்ல வேண்டுமென்று நினைத்தாலும், என்ன பழி போட வேண்டுமென்று நினைத்தாலும், அது நடக்கவில்லை ஏன் என்றால் தவறு முழுவதும் அவர்கள் பக்கம் இருக்கிறது.

வெளிநடப்பு

வெளிநடப்பு

சரி செய்த சாதனைகள் எல்லாம் எங்கள் பக்கம் இருக்கிறது. அதனால் எல்லாவற்றிற்கும் மின்சாரத் துறை அமைச்சர் சரியான, திட்டவட்டமான பதில்களைத் தருவதால், சரியான பதிலடி ஒவ்வொரு வினாடியும் அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதால் அதற்கு மேல் இங்கே இருக்க மாட்டார்கள் என்று எதிர் பார்த்தேன் அதற்கு தகுந்தபடி அவர்கள் வெளிநடப்பு செய்துவிட்டார்கள் என்று பேசினார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+