போலீசாருக்கு 8 மணி நேர பணி காலவரையறை செய்ய முடியாது: ஜெயலலிதா திட்டவட்டம்
சென்னை: போலீசாருக்கு 8 மணி நேரம்தான் பணி என்று வரையறுக்க முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. முன்னதாக கேள்வி நேரம் நடைபெற்றது.

அப்போது முதல்வர் ஜெயலலிதா உறுப்பினர்களின் பேச்சுக்கு பதிலளித்து பேசுகையில், "காவல்துறையினருக்கு 8 மணி நேர பணி நேரத்தை கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. அதுபோல பணி நேரத்தை அறுதியிட முடியாது. காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க சுழற்சி முறையில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் தங்களது குறைகளை மாதத்தில் ஒருநாள் மேலதிகாரிகளை சந்தித்து தெரிவிக்கவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பணிச்சுமையை குறைக்க வேறுபல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால் 8 மணி நேர பணிக்காலத்தை நிர்ணயிக்க முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications