இலவச டிவி திட்டத்தில் கூட மக்களை ஏமாற்றியவர்தான் கருணாநிதி...: ஜெயலலிதா குற்றச்சாட்டு
விழுப்புரம்: தனக்கு ஆதாயம் இருந்தால் மட்டுமே எந்த திட்டங்களையும் கருணாநிதி நிறைவேற்றுவார் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார். கருணாநிதியும், அவரது மகன் ஸ்டாலினும் மக்களிடம் மன்னிப்பு கேட்டு எத்தனை முறை கெஞ்சினாலும் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இலவச டிவி திட்டத்தில் கூட சிறிய டிவியை கொடுத்து ஏமாற்றிவர்தான் கருணாநிதி என்றும் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் அருகே ஜானகிபுரம் புறவழிச்சாலை சந்திப்பு எதிரே உள்ள மைதானத்தில், இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் விழுப்புரத்தில் உள்ள 11 தொகுதி அதிமுக வேட்பாளர்களையும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் அதிமுக வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் விழுப்புரம் வந்த ஜெயலலிதா, மாலை 4 மணிக்கு பிரசாரக் கூட்டத்தில் பேசினார். முதல்வரின் பிரச்சாரத்தை முன்னிட்டு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வாக்குறுதிகள் நிறைவேற்றம்
மக்களின் மத்தியில் பேசிய ஜெயலலிதா, அதிமுகவின் 5 ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டார். 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டன. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கனிணி, முதியோர் உதவித் தொகை 1000 ரூபாயாக உயர்வு, மூத்த குடிமக்களுக்கு இலவச பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

சொல்லாததையும் செய்தேன்
அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் என்பன உள்ளிட்ட பல அம்மா நலத் திட்டங்கள் என நீங்கள் எதிர்பார்க்காத பல திட்டங்களையும் செய்துள்ளேன். இதை எல்லாம் நீங்கள் எதிர்பார்த்தீர்களா? இன்னும் உங்களுக்கு நிறைய செய்வேன்.

வேலை வாய்ப்பு
தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தனியார் வேலைவாய்ப்பு மூலம் 1.28 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

3 லட்சம் பேருக்கு அரசு வேலை
இதுதவிர அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் 3,03,111 பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தமிழகத்தில் 1.08 கோடி புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளது.

சுத்தமான குடிநீர் திட்டம்
கிராமங்கள், நகரங்களில் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் பொதுமக்களுக்கு விலையில்லா மினரல் வாட்டர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அது தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.

திமுகவினர் பொய் பிரச்சாரம்
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ள நிலையில், திமுகவினர் எதுவுமே செய்யவில்லை என பிரசாரம் செய்து வருகின்றனர். திமுகவினர் வாக்கு கேட்டு வரும்போது, இத்திட்டங்களை கூறி, அவர்களை விரட்டி அடியுங்கள்.

தன்னலவாதி கருணாநிதி
கருணாநிதிக்கு தனது நலமும், தன் மக்கள் நலமும்தான் முக்கியம். பொதுமக்கள் நலன் முக்கியமில்லை. திமுக கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறிய பல திட்டங்களை நிறைவேற்றவில்லை.

டிவியில் ஏமாற்றிய கருணாநிதி
திமுக நிறைவேற்றிய ஒரே திட்டம் இலவச வண்ண தொலைகாட்சி திட்டம்தான். அதிலும் திமுக ஏமாற்றிவிட்டது. எல்லாரும் 21 இன்ஞ் டிவி வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் 14 இன்ஞ் டிவி மட்டுமே வழங்கப்பட்டது. அதேநேரத்தில் இலவசமாக கேபிள் இணைப்பு வழங்கப்படும் என கூறிய கருணாநிதி அதை நிறைவேற்றவில்லை.

ஊழல் நிறைந்த ஆட்சி
2006ம் ஆண்டு திமுக ஆட்சிகாலத்தில் லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது என்று தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக்கணிப்பு தெரிவித்தது. இதற்குப் பிறகே அறிவாலயத்தில் செயல்பட்டு வந்த சன் டிவியை அங்கிருந்து வெளியேற்றினார்கள். சில ஆண்டுகளில் இருவரும் ஒன்றான இணைந்து விட்டனர் இடையில் என்ன நடந்தது என்று யாருக்காவது தெரியுமா?

அரசு கேபிள் டிவி
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனத்தை அதிமுக ஆட்சியில் சீரமைக்கப்பட்டு, ரூ. 75 கட்டணத்தில் இணைப்பு வழங்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் இது 250 ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கேபிள் கட்டணம் குறித்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் எதுவுமே குறிப்பிடவில்லை என்றார்.

20 தமிழர்கள் கொலை
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது
இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களுக்கு யார் நன்மை செய்பவர்கள் என்று தெரியும்
திமுகவின் பொய் பிரச்சாரத்தை நம்ப மாட்டார்கள்.

வசந்தம் தொடர வாக்களியுங்கள்
தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்.5 ஆண்டுகளில் நீங்கள் எதிர்பார்க்காத பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்
என்னுடைய ஆட்சி உங்களுக்கு வசந்தத்தை கொடுத்திருக்கிறது. தமிழகம் அமைதி பூங்காவாய் தொடர்ந்திட... விவசாயம் விருத்தி அடைந்திட
தமிழகம் முன்னேற்றப்பதையில் சென்றிட...அமைதி வளம் வளர்ச்சி என்று தமிழகம் பீடு நடை போட அதிமுகவிற்கு வாக்களித்து அனைவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications