அப்பல்லோவில் அட்மிட் ஆன போது எனக்கு ஜெ. கசாயம் கொடுத்தனுப்பினார்- ராஜேந்திரபாலாஜி உருக்கம்

அப்பல்லோவில் நான் உடல் நல குறைவுகளால் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதா எனக்கு கசாயம் செய்து கொடுத்தனுப்பினார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சை பேச்சு

    சென்னை: அப்பல்லோவில் எனக்கு உடல்நிலை சரியில்லாததை கேள்விப்பட்ட ஜெயலலிதா எனக்கு கசாயம் செய்து கொடுத்தனுப்பினார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உருக்கமாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு காய்ச்சலால் உடம்பு சரியில்லை என்பதால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது உளவுத்துறை மூலம் ஜெயலலிதாவுக்கு இந்த தகவல் தெரிந்தது.

    மருத்துவ அறிக்கைகள்

    மருத்துவ அறிக்கைகள்

    உடனடியாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவரிடம் போன் மூலம் எனது உடல்நிலை குறித்து கேட்டார்கள். எனது மருத்துவ அறிக்கைகளை தனக்கு அனுப்புமாறும் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

    மருத்துவ அறிக்கைகள்

    மருத்துவ அறிக்கைகள்

    உடனடியாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவரிடம் போன் மூலம் எனது உடல்நிலை குறித்து கேட்டார்கள். எனது மருத்துவ அறிக்கைகளை தனக்கு அனுப்புமாறும் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

    குடிக்க வேண்டும்

    குடிக்க வேண்டும்


    அன்றைய தினம் காலை 11 மணிக்கெல்லாம் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது
    ஒரு கசாயத்தை என்னிடம் கொடுத்து, இதை ஜெயலலிதாவே அவர் கைப்பட போட்டுக் கொடுத்த கசாயம். இதை நீங்கள் குடிக்க வேண்டும் என்றனர்.

    காய்ச்சல் சரியாகிவிட்டது

    காய்ச்சல் சரியாகிவிட்டது

    நான் உடனே கேட்டேன். இதை ஜெயலலிதாதான் போட்டுக் கொடுத்தாரா. அவர் வீட்டிலிருந்துதான் வந்ததா என்று, அதற்கு அவர்கள் ஆம் என்றனர். பின்னர் மருத்துவரின் மருந்துக்கு பதிலாக ஜெயலலிதா கொடுத்த கசாயத்தையே குடித்தேன். காய்ச்சல் சரியாகிவிட்டது. உடனே வீடு திரும்பிவிட்டேன்.

    ஜெ. மருத்துவமனைக்கு வந்திருப்பார்

    ஜெ. மருத்துவமனைக்கு வந்திருப்பார்

    இன்னும் 2 நாட்கள் இருந்திருந்தால் ஜெயலலிதாவே மருத்துவமனைக்கு வந்திருப்பார். அந்தளவுக்கு அவருக்கு மனிதநேயம் உள்ளது என்று கூறி ராஜேந்திர பாலாஜி உருக்கமாக தெரிவித்தார். அம்மா உங்களுக்கு கசாயம் வைத்துக் கொடுத்தார்கள், அதுபோல் நீங்களும் அம்மாவுக்கு வைத்து கொடுத்திருக்கலாமே பாலாஜி சார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+