தமிழனை, கூட்டணியை மதிக்காதவர் ஜெயலலிதா: அன்பழகன் குற்றச்சாட்டு

நேற்று ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம் மற்றும் பல்லாவரம் நகர திமுக தேர்தல் அலுவலகம் குரோம்பேட்டையில் திறக்கப்பட்டது.
அந்த திறப்பு விழாவிற்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். பல்லாவரம் நகர செயலாளர் இ.கருணாநிதி வரவேற்றார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மீ.அ.வைதியலிங்கம், தாம்பரம் நகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா, பம்மல் நகர செயலாளர் வே.கருணாநிதி, பேரூர் செயலாளர்கள் திருநீர்மலை ஜெயக்குமார், பீர்க்கன்காரணை ராஜேந்திரன், பல்லாவரம் நகர நிர்வாகிகள் கொளத்துமேடு நாகலிங்கம், ராஜாராம், ரமேஷ், சிவகுமார், எபினேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் விழாவில் பேசியதாவது :-
கடந்த இரண்டரை ஆண்டு காலமாக பல்வேறு தொல்லைகளை அனுபவித்து வருகிறோம். அந்த சூழலை மாற்றுவதற்காக வந்ததுதான் இந்த நாடாளுமன்ற தேர்தல். நாம் அதிக இடங்களில் வெற்றி பெறும்போது மத்தியில் மதசார்பற்ற அரசு அமைய வழிவகை ஏற்படும். தமிழகத்தில் 5 முறை கருணாநிதி முதல்வராக இருந்து பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். தமிழகமும், தமிழனும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் கருணாநிதிதான். ஆனால் ஜெயலலிதா, தமிழனை மதிக்காதவர். கூட்டணியை மதிக்காதவர்.
40 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து கம்யூனிஸ்ட்களை கூட்டணியை விட்டு வெளியேற்றி விட்டார். ஆனால் கருணாநிதி அப்படி அல்ல. தனக்கு சமமாக கூட்டணி கட்சிகளை மதிப்பவர்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications