வெள்ளம் பாதித்த பகுதிகளில் மோடி, ஜெ. நாளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகின்றனர்?
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருமழையால் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை ஹெலிகாப்டர் மூலம் இன்று (புதன்கிழமை) முதல்வர் ஜெயலலிதா பார்வையிடுவதாக இருந்தது.

ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இந்த மூன்று மாவட்டங்களை நாளை (வியாழக்கிழமை) காலை முதல்வர் ஜெயலலிதா பார்வையிடுகிறார்.
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் பணியின் 13 குழுக்களைச் சார்ந்த 520 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 15 குழுக்களை மற்ற மாநிலங்களில் இருந்து அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநில பேரிடர் மீட்புப் படையின் 6 குழுவினரும், கடலோர பாதுகாப்பு படையைச் சார்ந்த 3 குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 126 மோட்டார் படகுகள், 74 சாதாரண படகுகள் என மொத்தம் 200 படகுகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், 50 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன'' என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஹெலிகாப்டர் மூலம் நாளை பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications