இலவச பேருந்தில் ஜெயலலிதா படம்... எதுக்கு இந்த விளம்பரம்னு தெரியலையே?
சென்னை: வெள்ள நிவாரண பொருட்களில் முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர்களை ஒட்டவேண்டும் என்று அதிமுகவினர் வற்புறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இலவசமாக இயக்கப்படும் பேருந்துகளில் முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர்களை ஒட்டி இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் பெய்த கனமழையால் வெள்ளம் பெருகி, மாநகர பொதுமக்கள் முடங்கியுள்ளனர். வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால், ஏராளமானோர் இருக்க இடமின்றி, பள்ளிகளிலும், கோயில்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பெய்து வரும் கனமழையில் பொதுமக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மனித சடலங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது. ஏராளமானோர் குடும்பத்தினருடன் வாழ வழியில்லாமல் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இதுபோன்று ஒரு அசாத்திய சூழ்நிலை நிலவி வரும் நிலையில், ஆளும் கட்சியினரோ, நிவாரண பொருட்களையும் வழங்காமல், பிறர் அளிக்கும் பொருட்களில் ஜெயலலிதா படத்தை போட்டு விளம்பரம் தேடிக் கொள்கின்றனர்.

ஜெயலலிதா படம் ஸ்டிக்கர்
திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலம் நிவாரண பொருட்கள் லாரிகள் மூலம் வந்து கொண்டு இருக்கையில், அதனை அதிமுகவினர் வழியில் நிறுத்தி பொருட்கள் உள்ள பையில் முதல்வர் ஜெயலலிதா படத்தை ஒட்டி அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது. இது கடும் விமர்சனத்திற்கு ஆளானது.

பேருந்துகளில் ஸ்டிக்கர்
இந்த புகாரே ஓயாத நிலையில், தற்போது அரசு பேருந்துகளில் முன்புறம், பின்புறம் உள்ள கண்ணாடிகளில் முதல்வர் ஜெயலலிதா படம் ஒட்டி இருப்பது மேலும் பொதுமக்களை ஆவேசமடைய செய்துள்ளது.

பேருந்துகளில் ஜெ. படம்
சென்னையில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மக்கள் தவிக்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தான் இலவச பஸ்களை இயக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசோ அவர்களாகவே பேருந்துகளை இயக்குவது போல, பேருந்துகளில் உள்ள கண்ணாடிகளில் முதல்வர் ஜெயலலிதா படத்தை ஒட்டியுள்ளனர்.

ஸ்டிக்கர் இல்லா அண்டை மாநில அரசுகள்
கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநில அரசு அங்கிருந்து பேருந்துகளை தமிழகத்துக்கு அனுப்பி இலவசமாக அம்மாநிலங்களுக்கு ஏற்றிச் செல்கின்றனர். அதில் கர்நாடக முதல்வர் சித்தராமையவின் படமோ, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் படமோ, கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் படமோ இல்லை. ஆனால் தமிழக அரசோ இலவச பேருந்து என்ற பெயரில் பெரும்பாலான பேருந்துகளை நிறுத்தி வைத்து விட்டு, பெயருக்கு குறைந்த அளவு பேருந்துகளை இயக்கி வருவதோடு அதில் ஜெயலலிதா படத்தை வேறு ஒட்டி வெறுப்பேற்றி வருகிறது.

வெளியூர்களுக்கு இலவச பேருந்து
கோயம்பேடு, கிண்டி, வடபழனி, வேளச்சேரி உள்பட பல இடங்களில் பொதுமக்கள் பேருந்து வரவில்லை என நெடு நேரம் காத்திருந்து சாலை மறியல் கூட செய்து வருகின்றனர். சென்னையில் இருந்து வெளியேறி வரும் மக்கள் வெளியூர் செல்வதற்கும் பேருந்துகளை இலவசமாக இயக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications