அம்மா திட்டங்கள்... பெண் முதல்வராக அதிக நாட்கள்.. சரித்திர சாதனை படைத்த ஜெயலலிதா!!
சென்னை: மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்தவர். 6வது முறையாக முதல்வராக மே மாதம் பதவியேற்றார். இந்தியாவில் அதிக நாட்கள் முதல்வர் பதவியில் இருந்த பெண் முதல்வர் என்ற பெருமையையும் அவர் படைத்தார்.
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் முதல்வர் பதவியில் அதிக நாட்கள் இருந்த பெண் முதல்வர் என்ற பெருமை பெற்றிருந்தார். அவர் மொத்தம் 5504 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்தார்.

அதை ஜெயலலிதா தாண்டிய சாதனை படைத்தார். ஜெயலலிதா முதல்வர் பதவியில் 5539 நாட்களுக்கு மேல் அவர் பதவி வகித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக நாட்கள் முதல்வர் பதவியில் இருந்த பெண் முதல்வராக ஜெயலலிதா. அவரது சாதனையை முறியடிக்கும் வகையில் இப்போதைக்கு யாருமே இல்லை என்பதால் நீண்ட காலத்திற்கு இந்த சாதனை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
5வது முறையாக முதல்வரான ஜெயலலிதா 1991ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி முதல் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றார். எம்.ஜி.ஆர் பாணியிலான திட்டங்களையும், இலவசத் திட்டங்களையும் அதிக அளவில் அமல்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக ஜெயலலிதா பெயரிலான அம்மா திட்டங்கள் ஜெயலலிதா ஆட்சியின் முக்கிய அம்சமாக, அடையாளமாக மாறியது.
இந்தியாவில் உள்ள பெண் முதல்வர்களில் முக்கியமானவராகவும் திகழ்ந்த ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் தற்போது (ஷீலா தீட்சித்தைத் தவிர்த்துப் பார்த்தால்), மாயாவதி (2562), ராப்ரி தேவி (2746), உமா பாரதி (259), வசுந்தரா ராஜே சிந்தியா (2829), மமதா பானர்ஜி (1930) ஆகியோர் உள்ளனர்.
அனந்தி பென் படேல், மகபூபா முப்தி ஆகியோர் இன்னும் 1000 நாட்களைக் கூடத் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை விட வெகு உயரத்தில் போய் நிற்கும் ஜெயலலிதாவின் சாதனையும், அவரது புகழும் தமிழ் உள்ளவரை நீடித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications