ஜெயலலிதா சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் - அப்பல்லோ அறிக்கை வெளியான நாள் இன்று
ஜெயலலிதா நலம் என்றும் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதாகவும் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி அப்பல்லோ அறிக்கை வெளியானது.
சென்னை: ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக அப்பல்லோ அறிக்கை வெளியிட்ட நாள் இன்றாகும்.
ஜெயலலிதாவின் மரணம் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை இன்றைக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு இதே நாளில் அப்பல்லோ மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.
இதே நாளில் அன்று அப்பல்லோ வெளியிட்ட அறிக்கை:

மருத்துவர்கள் ஆலோசனை
அப்பல்லோ மருத்துவமனை சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து செப்டம்பர் 29ஆம் தேதியன்று இரவு மருத்துவ அறிக்கையில் ஒன்றை தலைமை செயல் அதிகாரி டாக்டர் சுப்பையா விஸ்வநாதன் வெளியிட்டார்.

காய்ச்சல் குணமடைந்தது
அதில், காய்ச்சல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் ஆலோசனை
தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் பூரண நலம் அடையும் வகையிலான சிகிச்சைக்காக மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜெயலலிதா நலம்
அப்பல்லோ மருத்துவமனையின் அடுத்தடுத்த அறிக்கைகளும் ஜெயலலிதா நலமடைந்து வருவதாகவே கூறின. மருத்துவமனை வாசலில் காத்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர்.

சிகிச்சை பலனளிக்கவில்லை
நாட்கள் கடந்தன. ஆளுநர் முதல் மத்திய அமைச்சர்கள் வரைக்கும், எதிர்கட்சியினர் என பலரும் மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவை பார்த்து சென்றனர். ஆனாலும் ஒருவர் கூட ஜெயலலிதாவை பார்க்கவில்லை. 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தும் சிகிச்சை பலனளிக்காமலேயே சடலமாகவே போயஸ்கார்டன் திரும்பினார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications