ஜெயலலிதா நலம் பெற.. மானாமதுரை எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி பாதயாத்திரை, சிறப்பு யாகம்!
மதுரை: முதல்வர் ஜெயலலிதா விரைந்து நலம்பெற வேண்டி, மானாமதுரை சட்டசபை உறுப்பினர் மாரியப்பன் கென்னடி, தாய மங்கலம் முத்துமாரியம்மன் கோயில் வரை பாத யாத்திரை சென்றதோடு, சிறப்பு யாகம் நடத்தினார்.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான, ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதி முதல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து கட்சியின் பல்வேறு கட்ட நிர்வாகிகளும், பல்வேறு கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கிறிஸ்த நிர்வாகிகள் ஜெபக்கூட்டங்கள் நடத்துகிறார்கள், இஸ்லாமிய நிர்வாகிகள் சிறப்பு தொழுகைகளை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ஜெயலலிதா, பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்பிட வேண்டி மானாமதுரை அதிமுக எம்.எல்.ஏ, மாரியப்பன் கென்னடி, தலைமையில் முதன்முறையாக தாயமங்கலம் முத்துமாரியம்மன் திருக்கோவிலுக்கு பாதயாத்திரை நடைபெற்றது. அதேபோல முதல்வர் ஜெயலலிதா, பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்பிட வேண்டி தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடைப்பெற்றது.

இதில் மாரியப்பன் கென்னடியும், அவருடன், திரளான கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு, முதல்வர் விரைந்து நலம் பெற மனமுருக வேண்டிக்கொண்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications