தூத்துக்குடி மாவட்ட அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் நீக்கம்: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி மாவட்ட அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸி கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சியினர் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், அதிமுகவில் மட்டும் களை எடுப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று சேலம் மாவட்ட செயலாளராக இருந்த செல்வராஜை நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டார்.

 Jayalalithaa on today sacked thoothukudi District Secretary

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸி கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பிலும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பிலும் இருக்கும் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸி இன்று முதல் அப்பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+