இனியொருமுறை இந்த அபாயமான செயலைச் செய்ய வேண்டாம் - ஹுசைனிக்கு ஜெயலலிதா கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் சிலுவையில் அறைந்து கொண்ட கராத்தே வீரர் ஹூசைனிக்கு, 'இனியும் இதுபோன்ற அபாயகரமான செயலைச் செய்ய வேண்டாம்' என்று கடிதம் எழுதியுள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

ஹூசைனிக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:
நான் மீண்டும் தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, நீங்கள் உங்களை வருத்திக் கொண்டு சிலுவையில் அறைந்து கொண்ட செயல், என்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
உங்களுடைய ஆதரவை எதிர்பார்த்தாலும், எல்லையை தாண்டி இதுபோன்று உங்களை வருத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
என் மீது நீங்கள் காட்டிய அக்கறைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இனியொரு முறை இத்தகைய அபாயகரமான நடவடிக்கைக்கைக்கு செல்ல வேண்டாம். உங்கள் உடல் நலனைப் பார்த்துக் கொள்ளவும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications