சட்டசபையில் டிச. 5-ல் ஜெ. படத் திறப்பு விழா... பிரதமர் மோடியை பங்கேற்க வைக்க பகீரத முயற்சி!
தமிழக சட்டசபையில் டிசம்பர் 5-ந் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தைத் திறந்து வைப்பது தொடர்பாக தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடியார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை பங்கேற்க
சென்னை; தமிழக சட்டசபையில் டிசம்பர் 5-ந் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தைத் திறந்து வைப்பது தொடர்பாக தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடியார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை பங்கேற்க வைப்பதிலும் முதல்வர் தரப்பு படுதீவிரமாக இருக்கிறதாம்.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் பங்களாவை நினைவில்லமாக்குவோம்; ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்; சட்டசபையில் ஜெயலலிதா படம் திறந்து வைக்கப்படும் என முதல்வர் எடப்பாடியார் அறிவித்திருந்தார். இதில் போயஸ் இல்லம் நினைவில்லமாக்கப்பட்டு வருகிறது.

எம்ஜிஆர் சமாதியிலேயே ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டசபையில் ஜெயலலிதா படத்தைத் திறப்பதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடியார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்த ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்க திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜெயலலிதா படத்திறப்புக்கான வேலைகளில் முதல்வர் எடப்பாடியார் தீவிரமாக இருக்கிறார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
ஜெயலலிதா மறைந்த நாளான டிசம்பர் 5-ந் தேதி சட்டசபையில் அவரது படத்தைத் திறப்பது என திட்டமிட்டு வேலைகள் நடைபெறுகிறதாம். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை பங்கேற்க வைப்பதிலும் டெல்லி லாபிகள் படுதீவிரமாக செயல்பட்டு வருகின்றனவாம்.












Click it and Unblock the Notifications