For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜூன் 3ல் மோடியை சந்திக்கிறார் ஜெயலலிதா

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஜூன் 3ம்தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, தமிழகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், தமிழகத்தின் நியாயமான உரிமைகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பிரதமரிடம் ஜெயலலிதா வலியுறுத்துவார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Jayalalithaa will meet Prime Minister NarendraModi on 3rd June

குஜராத் முதல்வராக நரேந்திரமோடி பதவி வகித்த காலகட்டத்தில் இருந்து அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் நல்லுறவு இருந்து வருகிறது. பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதும், ஜெயலலிதா அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மோடியும் உறுதியளித்தார். ஆனால் மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டதால் அந்த விழாவை ஜெயலலிதா புறக்கணித்தார்.

இந்த சம்பவம் மோடி மற்றும் ஜெயலலிதா இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட காரணமாகிவிடுமோ என்று பாஜக மற்றும் அதிமுகவினர் சந்தேகப்பட்டனர். ஆனால் மோடியை சந்தித்து பேச ஜெயலலிதா டெல்லி செல்ல இருப்பது இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் நல்லுறவை பேணும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Chief minister Jayalalithaa is scheduled to visit New Delhi on 3rd June to meet Prime Minister NarendraModi. Jayalalithaa to submit memorandum on issues concerning state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X