சென்னை நீதிபதி வீட்டில் துணிகரம்... 30 பவுன் நகைகள் கொள்ளை!
சென்னை: சென்னை 6வது சிட்டி சிவில் கோர்ட் நீதிபதி ஜஸ்டின் டேவிட் வீட்டில் புகுந்த திருடர்கள் அங்கிருந்து 30 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதி ஜஸ்டின் டேவிட் தனது குடும்பத்தினருடன் சென்னை எழும்பூரில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள பி-பிளாக், 13-வது அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறையையொட்டி, தனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு கடந்த 28-ந்தேதி நீதிபதி ஜஸ்டின் டேவிட் குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.
நேற்று காலை நீதிபதி ஜஸ்டின் டேவிட் வீட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அருகில் வசித்து வரும் நீதிபதி ஒருவர் எழும்பூர் போலீஸ் நிலையத்துக்கும், நீதிபதி ஜஸ்டின் டேவிட்டுக்கும் தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு எழும்பூர் போலீசார் சென்று பார்வையிட்டனர்.
அப்போது நீதிபதி ஜஸ்டின் டேவிட் வீட்டின் கதவு லாக்கர் திருட்டு சாவி மூலம் திறக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. வீட்டின் உள்ளே சென்று போலீசார் பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு, பீரோவிலேயே சாவி தொங்கிக் கொண்டிருந்தது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 30 சவரன் நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. 2 அல்லது 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டு கதவு, பீரோவில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீதிபதி ஜஸ்டின் வீட்டு கதவை உடைத்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications