அதிமுகவுக்கு ஜான் பாண்டியன் ஆதரவு... 5 சீட் கேட்கிறார்!
சென்னை: ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. 5 தொகுதிகளை அதிமுக தரும் என்று எதிர்பார்ப்பதாக கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பண்ருட்டி வேல்முருகன், செ.கு.தமிழரசன், எஸ்.எம்.பாக்கர், ஷேக் தாவூது, கதிரவன், தனியரசு உள்ளிட்ட சிறிய கட்சிகளின் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் அதிமுகவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவரான ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகிற தேர்தலில் அதிமுக அணிக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு தீர்மான முடிவுபடி மீண்டும் ஆதரவு அளிக்க உள்ளோம்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முறைப்படி தீர்மான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவரை சந்தித்து பேசவும் நேரம் கேட்டு உள்ளோம். அழைப்பு வந்ததும் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவோம்.
அதிமுகவில் 5 சீட்டுகளை கேட்டு எதிர் பார்த்து இருக்கிறோம். தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தமிழகம் முழுவதும் 25 லட்சம் தொண்டர்களை கொண்ட பெரிய கட்சியாக செயல்பட்டு வருகிறது. எனது தலைமையிலான அகில இந்திய தேவேந்திர குலவேலாளர் அமைப்பும், எங்கள் கட்சியும் அதிமுக வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவோம்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இதுவரை கட்சிக்காக ஒரு மாநாடு கூட நடத்தவில்லை. 5 ஆயிரம் தொண்டர்களை கூட கூட்டமுடியாத நிலையில் தான் கிருஷ்ணசாமி உள்ளார் என்றார் அவர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications