நானும் ஒரு நர்ஸும்மா.. உள்ளே கொஞ்சம் விடுங்கம்மா.. ஜூலியை தடுத்து நிறுத்திய போலீஸ்!
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பிக்பாஸ் ஜூலிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.
Recommended Video

சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ஜூலிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து செவிலியர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தை கைவிட்டனர்.

தலைவர்கள் வருகை
ஆனால் மற்றொரு பிரிவினர் தொடர்ந்து 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் தமிழிசை, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் ஜூலி வந்தார்
இந்த நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள பிக்பாஸ் ஜூலி டிஎம்எஸ் அலுவலகத்துக்கு வந்தார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

நானும் ஒரு நர்ஸ்தானே
ஆனால் அவர் தானும் ஒரு நர்ஸ் என்பதால் போராட்டத்தில் ஈடுபட வந்துள்ளதாக போலீஸாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்குப் பிறகு வேற ஜூலி
கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து பிரபலமடைந்தார் ஜூலி. ஆனால் அது எல்லாவற்றையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெடுத்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
வேண்டாம் வேண்டாம்..ஜூலி வேண்டாம்.. ஒரு வேளை ஜூலி உள்ளே போயிருந்தா செவிலியர்கள் இப்படிப் போராட நேரிட்டிருக்குமோ!
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications