For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று சர்வதேச நகைச்சுவை தினம்: வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்!

இன்று சர்வதேச நகைச்சுவை தினம் கொண்டாடப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: சர்வதேச நகைச்சுவை தினம் ஆண்டுதோறும் ஜூலை முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

'சிந்திக்கத் தெரிந்த மனித இனத்துக்கே சொந்தமான கையிருப்பு’ என சிரிப்பை பலவகைப் படுத்தியுள்ளார் கலைவாணர் என்.எஸ்.கே. சிரிப்பினால் பகைவனைக் கூட நண்பன் ஆக்கலாம், வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது அறிவியல் கூறும் உண்மை.

சிரிக்க தெரிந்த சமுதாய விலங்கு தான் மனிதன் என்கிறார்கள். சிரிப்பினால் மனிதர்களுக்கு பலவகையில் நன்மைகள் உண்டாகின்றன.

சர்வதேச நகைச்சுவை தினம்:

சர்வதேச நகைச்சுவை தினம்:

அப்படிப்பட்ட சிரிப்பை கொண்டாடி கவுரவப் படுத்த ஆண்டுதோறும் ஜூலை முதல் தேதி சர்வதேச நகைச்சுவை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் எப்படி, யாரால் உருவானது என்பது பற்றியெல்லாம் தெளிவான வரலாறு இல்லை.

ஆராய்ச்சி முடிவுகள்:

ஆராய்ச்சி முடிவுகள்:

சிரிக்கும் போது மனதில் ஒருவித மகிழ்ச்சியான கலகலப்பான உணர்ச்சி ஏற்படுகிறது. இதனால் உடலில் ஆரோக்கியமான வேதிப்பொருட்கள் உற்பத்தியாவதாகவும், அது நோயைத் தீர்க்கும் மருந்தாக செயல்படுவதாகவும் அறிவியல் கூறுகிறது. சிரித்து மகிழ்வதால் நோய்கள் வராமல் தடுக்கப்படுவதுடன் வந்த நோய்களும் விரைவில் குணமாவதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

 புன்னகையே சிறப்பு:

புன்னகையே சிறப்பு:

அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, சாகசச் சிரிப்பு, நையாண்டி சிரிப்பு, புன்சிரிப்பு என சிரிப்பில் பலவகை உண்டு. எத்தனை மலர்கள் இருந்தாலும், ரோஜாவுக்கு என்று தனிச்சிறப்பு இருப்பதுபோல், எத்தனையோ வகை சிரிப்புகள் இருந்தாலும், புன்னகைக்கு என்று தனி மரியாதை உள்ளது.

வாய் விட்டு சிரிங்க:

வாய் விட்டு சிரிங்க:

சர்வதேச நகைச்சுவை தினமான இன்று நாமும் சிரித்து, மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சிக்கலாம். இயந்திர உலகில் சிரிப்பதற்குக் கூட நேரம் இல்லாமல் பலர் ஓடி ஓடி உழைத்து வருவதால் தான், ஆங்காங்கே உடற்பயிற்சிக் கூடங்கள் மாதிரி, சிரிப்பு கிளப்புகளும் உருவாகி வருகின்றன. சிரிப்புகளை விற்று மன அழுத்தங்களை வாங்காமல், தானும் சிரித்து, மற்றவர்களையும் சிரிக்க வைத்து இந்த சர்வதேச நகைச்சுவைத் தினத்தைக் கொண்டாடலாம்.

English summary
Today is International Joke Day. The aim of the International Joke Day is to bring people to laugh by telling them jokes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X