ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது ஜெ. மரணத்தில் சந்தேகம் எழவில்லையா? செங்கோட்டையன்
ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழவில்லையா? என்று அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு: ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது ஜெயலலிதா மரணம் குறித்து ஏன் சந்தேகம் எழவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஏன் அவரது படத்தை வெளியிடவில்லை என பலர் கேட்கிறார்கள். 1984-இல் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் உள்ள புருக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருடைய படத்தை வெளியிட்டிருந்தார்கள்.

உடல் நலம் தேறி வந்த பின் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அந்தப் படத்தை ஏன் வெளியிட்டீர்கள் என எங்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். கேட்டார். கட்சித் தலைவர்கள் சிகிச்சை பெறும்போது எந்தப் படத்தையும் வெளியிட விரும்ப மாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தபோது எந்தவிதமான தவறும் நடக்கவில்லை.
அதிமுகவிற்காக பன்னீர்செல்வம் எந்த தியாகத்தையும் செய்யவில்லை. குளுகுளுவென்ற கார்கள், பின்னாலே, முன்னாலே பவனிவரும் கார்கள் மத்தியில் டெல்லிக்கு செல்வது இதையெல்லாம் பார்த்தார். அப்போதெல்லாம் ஜெயலலிதா பற்றி அவருக்கு கவலையில்லை. இன்றைக்கு சொல்கிறாரே, நான் கேட்கிறேன், 60 நாட்கள் முதல்வராக இருந்தாரே பன்னீர்செல்வம், அப்போது தெரியவில்லையா ஜெயலலிதாவின் இறப்பு பற்றி' இவ்வாறு பேசினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications