ஓபிஎஸ்... ஈபிஎஸ்... பன்னீர்... வெந்நீர்... - வெளுத்து வாங்கிய கி. வீரமணி
கொத்தடிமை ஆட்சியை இந்திய வரலாற்றில் பார்த்ததே இல்லை என்று வீரமணி கூறியுள்ளார்.
திருச்சி: நீட் தேர்வில் ஓராண்டு விதி விலக்கு என்று கூறி நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார்கள் என்று கி. வீரமணி கூறியுள்ளார்.
திருச்சியில் திமுக நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய கி. வீரமணி, மத்திய மாநில அரசுகளை கடுமையாக சாடினார்.

நீட் தேர்வு விவகாரத்தில் நல்ல செய்தி வரும் என்று குடுகுடுப்பைகாரன் போல சொல்லி அனிதா போன்ற ஏழை மாணவர்களை ஏமாற்றி விட்டார்கள்.
அனிதா போன்ற ஏழை மாணவர்களின் கனவுகளை சிதைத்து விட்டது நீட் தேர்வு. நீட் தேர்வை சவப்பெட்டியில் வைத்து அறையும் வரை போராட வேண்டும். அதற்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேள்வி கேட்டது ஏன்?
இது தளபதி ஸ்டாலின் ஆளப்போகிற மண். இனி இங்கே நீட் இருக்கக் கூடாது. நாளுக்கு ஒரு கூத்து நடத்தி மிகப்பெரிய மோசடி நடத்தி விட்டார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டனர் மாணவர்கள்.
நீட் தேர்வை சவப்பெட்டிக்குள் வைத்து ஆணியடிக்கும் வரை ஓயமாட்டோம். நீட் தேர்வு மோடி அரசின் மோசடி வேலை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேள்வி வைப்பது ஏன்?
சிபிஎஸ்இ பாடத்திட்டம் மட்டுமே உயர்வு அல்ல. சமச்சீர் கல்வி திட்டம் சிறந்த பாடத்திட்டங்களை கொண்டது. மத்திய அரசுக்கு எதிராக ஈபிஎஸ், ஓபிஎஸ் பன்னீர், வெந்நீர் யாருமே வாயை திறக்கவில்லை என்றும் கி. வீரமணி கூறியுள்ளார்.
நீட் தேர்வு எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் பிச்சை கேட்கவில்லை. சலுகை கேட்கவில்லை. அனிதா போன்ற ஏழை மாணவிகள் மேலே வரவேண்டும் என்றும் கி. வீரமணி கூறியுள்ளார்.
ட்விட்டர், பேஸ்புக் இணைய இளைஞர்களே போராட தயாராகுங்கள் என்று கூறி அமர்ந்தார் கி. வீரமணி.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications