என்னாது சத்யம் இல்லையா... இதுக்கு தான் வந்தோமா?: ஏர் ஏசியாவில் வந்த 'கபாலி' ரசிகர்கள் போராட்டம்!
சென்னை: சத்யம் தியேட்டரில் கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க பெங்களூரில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் சென்னை வந்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்து போராட்டத்தில் குதித்தனர்.
கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண சுமார் 160 ரசிகர், ரசிகைகள் ஏர் ஏசியா விமானம் மூலம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள் சத்யம் தியேட்டரில் படம் பார்ப்பதாக இருந்தது.
இந்நிலையில் முன்னறிவிப்பு எதுவும் இன்றி அவர்கள் படம் பார்க்கும் இடத்தை சத்யத்தில் இருந்து வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவுக்கு மாற்றிவிட்டனர்.

ஏர் ஏசியா
சத்யம் சினிமாஸில் கபாலி படம், சாப்பாடு உள்ளிட்டவைக்காக பெங்களூர் ரசிகர்கள் ஏர் ஏசியாவிடம் ரூ.8 ஆயிரம் அளித்து அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுக்குத் தானா?
இது குறித்து பெங்களூரில் இருந்து வந்துள்ள இந்துமதி என்பவர் கூறுகையில், பிரசாத் ஸ்டுடியோவில் படம் பார்க்க விரும்பவில்லை. பிரசாத் ஸ்டுடியோவில் படம் பார்ப்பது வீட்டில் சிடியில் பார்ப்பது போன்று தான் இருக்கும். இதற்காகவா நாங்கள் அவ்வளவு பணம் செலவு செய்தோம் என்றார்.

சத்யம் சினிமாஸ்
ஏர் ஏசியா இந்தியா பிரிவின் சிஇஓ அமர் அப்ரோல் கூறுகையில், விமானம் காலை 7 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது. சத்யம் சினிமாஸில் படம் காலை 9 மணிக்கு துவங்க வேண்டியது. சத்யம் சினிமாஸில் முதல் காட்சி மதியம் 12 மணிக்கு தான் துவங்கும் என எங்களிடம் தெரிவித்தார்கள். அதனால் தான் பிரசாத் ஸ்டுடியோவுக்கு இடத்தை மாற்றினோம். இந்த சம்பவத்திற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

போராட்டம்
மதியம் 12 மணி காட்சியை பார்க்க தயார் என்றால் பிரசாத் ஸ்டுடியோவில் படம் பார்க்கத் தேவையில்லை என்று ஏர் ஏசியா தெரிவித்ததை ரசிகர்கள் ஏற்றனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications