கசிந்தது கபாலி போட்டோ ஷூட் ஸ்டில்... கமிஷனர் அலுவலகத்தில் புகார்?
இந்த ஆன்லைன் யுகத்தில் எதையும் ஒளித்து மறைத்து வைக்க முடியாத நிலை. ரகசியம் என நினைத்து நாம் பொத்திப் பொத்தி வைக்கும் விஷயங்கள், அதே வேகத்தில் அம்பலத்தில் நிற்கின்றன.
ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தில் அவரது தோற்றம் எப்படி இருக்கும் என்பதை அவரவர் இஷ்டப்படி எழுதி வந்த நிலையில், இப்போது அந்த போட்டோ ஷூட் படம் ஒன்றே வெளியாகி அதிர வைத்துள்ளது.

கடந்த வாரம் சென்னை ஏவிஎம்மில்தான் ரஜினி பங்கேற்ற கபாலி போட்டோ ஷூட் நடந்தது. ஏகப்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகள். செய்தியாளர்கள் ஏவிஎம் காம்பவுண்டோடு நிறுத்தப்பட்டார்கள்.
ஆனால் இந்த கெடுபிடிகளை மீறி ஒரு ஸ்டில் வெளியாகிவிட்டது. அது போட்டோ ஷூட் எடுத்த பிறகு, அந்த ஸ்டில்களை ரஜினிக்கு இயக்குநர் ரஞ்சித் மற்றும் புகைப்படக்காரர்கள் போட்டுக் காட்டும் காட்சி. அதில் ரஜினி வெள்ளைத் தாடி மற்றும் கறுப்பு - வெளுப்பு கலந்த முடியுடன் காட்சி தருகிறார். அதை வைத்து ரஜினியின் கெட்டப்பை ஓரளவு யூகித்துவிட முடியும்.
இந்த ஸ்டில் வெளியானது படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. படக்குழுவுக்குள் அல்லது இந்த போட்டோ ஷூட்டில் கலந்து கொண்ட யாரோ ஒருவர்தான் இந்த ஸ்டில்லை லீக் செய்திருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. நாளை இதோ போல வேறு முக்கியமான ஸ்டில்களையும் லீக் செய்யும் முன் உஷாராகிவிட வேண்டும் என்பதால், இதுகுறித்து சைபர் க்ரைம் பிரிவில் புகார் செய்ய முடிவெடுத்துள்ளாராம் தயாரிப்பாளர் தாணு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications