For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலாநிதி மாறன் ''மேஜிக்'': திமுக கூட்டணியில் சேருகிறது தேமுதிக?

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக இணைய முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

திமுக கூட்டணியில் சேர விஜயகாந்த் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், அவருக்கு 59 இடங்கள் வழங்க திமுக ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.

Kalanidhi Maran pitches in: DMK-DMDK to form alliance in assembly polls

விஜய்காந்த் 90 இடங்கள் கேட்ட நிலையில், ஏகப்பட்ட இழுபறி பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 59 இடங்கள் வரை தர திமுக ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டணி உருவாவதில் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் முக்கிய பங்கு வகித்துள்ளார். விஜய்காந்துடன் திமுக தரப்பில் பல தரப்பும் பேச்சு நடத்தியும் பலன் ஏற்படாத நிலையில் கலாநிதி மாறன் இதில் இறங்கி நேரடியாக விஜய்காந்துடன் பேசி கூட்டணியை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

முதலில் தேமுதிக 90 முதல் 100 இடங்களும், துணை முதல்வர், 10 அமைச்சர் பதவிகள், உள்ளாட்சித் தேர்தலில் 35 சதவீத இடங்கள் வரை கேட்டதால் திமுக தரப்பு பின்வாங்கியது.

ஆனால், இறுதியில் ஆட்சியில் தேமுதிகவுக்கு பங்கு இல்லை, அதே நேரத்தில் நடைபெறவிருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவுக்கு முக்கிய மாநகராட்சி மேயர் பதவிகளில் போட்டியிட இடங்கள் ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டதாகவும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு 35 சதவீத இடங்கள் வரை திமுக ஒதுக்க உள்ளதாகவும் தெரிகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு அதிக இடங்களைப் பெறுவதன் மூலம் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளுக்கு பதவிகள் கிடைக்கச் செய்யலாம் என விஜய்காந்த் நினைப்பதாகத் தெரிகிறது. இதன்மூலம் கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்தவும் வாய்ப்பாக அமையும் என விஜய்காந்த் கருதுகிறார். இதனால் திமுகவிடம் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைை அவர் கைவிட்டதாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டணி குறித்த அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.

English summary
In a major development Vijaykanth’s DMDK had agreed to join hands with DMK in the assembly polls of Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X