இலைய "எந்த ஆடு" சாப்பிட போகுதோ.. இந்த திமுக வேற.. அதுக்குதான் சொல்றேன்.. வெளுத்து கட்டிய காளியம்மாள்

எந்த ஆடு இலையை தின்ன போகிறதோ என்று நாம் தமிழர் கட்சி காளியம்மாள் கேட்டிருக்கிறார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: இலையை எந்த ஆடு சாப்பிடுகிறது, திரும்பவும் அந்த இலை எப்படி துளிர்விட போகிறது? என்பது எங்களைவிட செய்தியாளர்களுக்குதான் நன்றாக தெரியும்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலானது, நாம் தமிழர் கட்சிக்கான விடியலாக இருக்க போகிறது என்று அக்கட்சியின் காளியம்மாள் கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டம் இடிந்தகரை தூய லூர்து அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் இருந்து இடிந்தகரை வரையிலான 16 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவு பாய்மர படகு போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட பாய் மரப்படகுகள் கலந்து கொண்டார்கள்.. இந்த போட்டியினை நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள் பேசியதாவது:

 கடலோடி மக்கள்

கடலோடி மக்கள்

கடலோர இளைஞர்களுக்காகவும், கடலோடிகளுக்காகவும் எந்தவிதமான நில உரிமையோ, அதிகாரப்பகிர்வோ, அரசியல் பங்கேற்போ இது எதுவுமே இல்லை.. இதை தாண்டி தமிழர்களுக்கான வீர விளையாட்டாக, நிலப்பரப்பில் உள்ளவர்கள், விவசாயி குடிமக்கள், மஞ்சுவிரட்டு போன்ற வீரவிளையாட்டுக்களை மேற்கொள்கிறார்களோ, அப்படி எதுவும் இல்லை.. ஆனால், கையால் துடுப்பு போட்டு போட்டு, படகுப்போட்டியை காலம் காலமாக செய்து வருகிறோம்.. நாம் தமிழர் கட்சி தமிழர்களுக்காக மிகப்பெரிய விளையாட்டை முன்னெடுத்தக்கூடிய தருவாயில், காவல்துறையும், அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இதை தடுப்பதற்கான வேலைகளை நிறைய செய்தார்கள்..

தாக்கம்

தாக்கம்

இந்த படகுப்போட்டிக்காக, கடந்த 18ம் தேதி அனுமதி கடிதம் கொடுத்தோம்.. ஆனால், மறுப்பு கடிதம் நேற்று தான் முடிவு செய்யப்படுகிறது.. கடல் சூழல் சரியில்லை, காற்று அதிகமாக இருக்கிறது என்று சொல்லி வேண்டாம் என்கிறார்கள்.. நாம் தமிழர் கட்சிக்கு தான் இப்படி ஒரு நிலைமையே தவிர, இதுவே திமுக இந்த போட்டி நடத்தினால், அதற்கு முழு நேர பாதுகாப்பு தந்து நடத்துறாங்க.. இது ஜனநாயக படுதுரோகம்.. எங்கள் கடலில் படகு செலுத்த வேண்டும் என்றால்கூட, அரசு அனுமதி வாங்கிதான் செலுத்தணும்னு நெருக்கடி உள்ளது. இது பாசிச போக்கு.. நாம் தமிழர் கட்சி வளரவே கூடாது என்பதில் நுட்பமாக வேலை செய்றாங்க..

 எங்க விடியல்

எங்க விடியல்

குறிப்பாக கடலோர, பகுதிகளில், நாம் தமிழர் கட்சியின் தாக்கம், புரிதலோடு அதிகரித்து வருவதால், திமுகவின் அடக்குமுறையை மிகப்பெரிய ஜனநாயக படுகொலையாக பார்க்கிறோம். இந்த இடைத்தேர்தலானது, மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கான நுட்பமான வாய்ப்பாக இருக்கும். நாம் தமிழர் கட்சி களத்தில் வாக்குகளை சேகரிக்க செல்லும்போது, மக்களின் மிகப்பெரிய வேதனையை பார்க்க முடிகிறது.. 60 ஆண்டு காலம் சாலை சீரமைப்பு முதல் கழிவுநீரை முறைப்படுத்துவது வரை மிகப்பெரிய பிரச்சனைகளை அங்கிருப்பவர்கள் கையாண்டு வருகிறார்கள்..

 துளிர்க்குதா இலை

துளிர்க்குதா இலை

"வாக்குக்கு காசு" என்பது மட்டும் இல்லாமல் இருந்தால், உறுதியாக நாம் தமிழர் கட்சி எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் வென்று முடிச்சிடும். ஆனா, ஓட்டுக்கு பணம் என்பதைதான் திமுகவும், அதிமுகவும் கையில் எடுப்பதற்கான ஒரு வாய்ப்பாக, உட்கார்ந்து உட்கார்ந்து யோசிச்சி முடிவெடுக்கிறார்கள்.. இந்த நுட்பத்தை, இந்த யோசனையை, இந்த அறிவை, மக்களுக்கு நல்லது செய்வதில் பயன்படுத்தி இருந்தால், நாங்கள் இந்நேரம் ஒரு அமைப்பாகவே கட்டமைக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.. ஈரோடு கிழக்கு மிகப்பெரிய வாய்ப்பாக, தமிழ் மக்களுக்கான விடியலாக, அது இருக்கும்.. அது திமுகவின் விடியல் இல்லை..

 ஆடு சாப்பிடும் இலை

ஆடு சாப்பிடும் இலை

நாம் தமிழர் கட்சியின் விடியல் ஆகும்.. இப்போது அதிமுகவில், இலையை எந்த ஆடு சாப்பிடுகிறது, திரும்பவும் அந்த இலை எப்படி துளிர்விட போகிறது? என தெரியவில்லை. இலை என்றாலே ஆடு சாப்பிட தான் செய்யும்.. 2 அணிகளும் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி, மறுபடியும் ஓரணியாக திரள்வோம் என்கிறார்கள்.. இந்த 2 அணிகளும் மக்களுக்கான போட்டத்தில் நின்றார்களா, மக்களுக்காக இணைந்தார்களா? மக்கள் தேவை பற்றி பேசினார்களா? போன்ற விஷயத்தில் இவர்கள் ஓரணியாக இணைந்தார்களா? என்ற கேள்வியை நான் மக்களிடத்திலேயே விட்டுவிடுகிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+