Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்குறிச்சியில் ஒரு கள்ளக்காதல்.. கட்டிலுக்கு அடியில் கிடந்த பெண் ஆபீஸர் உடல்.. இவ்ளோ ஆண் நண்பரா

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வீட்டில் கட்டிலுக்கு அடியில் கிடந்துள்ளார் பெண் அதிகாரி.. காவல்துறையில் பல பேருடன் தொடர்பில் இருந்துள்ளதாக, ரமணியின் கணவர் தந்துள்ள வாக்குமூலம் கள்ளக்குறிச்சி காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது புல்லூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ரமணி.. 32 வயதாகிறது.. இவர் வங்கி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.

Kallakurichi Bank Officer Ulundurpet

2 நாட்களுக்கு முன்பு, ரமணிக்கு அவரது அம்மா லட்சுமி போன் செய்துள்ளார்.. ஆனால் ரமணியின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகப்பட்ட அம்மா, நேரடியாகவே ரமணி வீட்டிற்கு வந்தார்.

ரமணி கொலை: அப்போது ரமணியின் வீட்டிலுள்ள அந்த தனி அறை பூட்டப்பட்டிருந்தது.. இதனால், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார் லட்சுமி அம்மா.

அப்போது ரமணி சடலமாக அந்த தனி அறையில் விழுந்து கிடந்திருப்பதை பார்த்து கதறினார்.. அவரது முகம் மற்றும் தலை ஆகிய இடங்களில் ரத்த காயங்கள் மிகப்பெரிய அளவில் கிடந்தன..

சந்தேகம்: இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு எடைக்கல் போலீசார் விரைந்து வந்தனர்.. கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த ரமணியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.. பிறகு கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையையும் மேற்கொண்டனர்.

அப்போதுதான், ரமணியின் கணவர் 33 வயதான அசோக் அங்கு காணாமல் போனது தெரியவந்தது.. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.. இதனால், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.. இறுதியில், வேப்பூரில் பதுங்கியிருந்த அசோக்கை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்களை கூறி போலீசாரை அதிர வைத்தார் அசோக்..

2 திருமணம்: ரமணி என்னை கல்யாணம் செய்வதற்கு முன்னாடியே 2 பேரை கல்யாணம் செய்துள்ளார்.. அவர்கள் 2 பேரையுமே ஏமாற்றிவிட்டார்.. தனக்கு 2 முறை கல்யாணம் ஆனதை மறைத்து, என்னையும் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார்.

இது என்னோடு மட்டும் நிற்கவில்லை.. கான்ஸ்டபிள், எஸ்.ஐ உட்பட பல்வேறு ஆண்களுடன் தவறான பழக்கம் வைத்திருந்தார்.. இதெல்லாம் தெரிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.. ரமணிக்கு நிறைய அட்வைஸ் தந்தேன்.. ஆனால், அடியாள் வைத்து என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டிக் கொண்டே இருந்தார்.. எனக்கு வேறு வழியின்றி ரமணியை கொன்றுவிட்டேன்" என்று வாக்குமூலத்தில் சொன்னாராம் அசோக்.

பெண் அதிகாரி: புல்லூர் கிராமத்தில் வசித்து வருகிறார் ரமணி. இவர் விருத்தாசலத்தில் செயல்பட்டு வரும் வங்கியில் மிகப்பெரிய வேலை கிடைத்துள்ளது.. ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன்பே, 2 திருமணமாகி, கணவர்களுடன் கருத்து வேறுபாடு காரணமாக, தனியே வாழ்ந்து வந்திருக்கிறார்.. அப்போதுதான், பாண்டூர் பகுதியை சேர்ந்த அசோக்குடன் ரமணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆட்டோ டிரைவராக வேலைபார்த்து வந்த அசோக், ஒருகட்டத்தில் ரமணியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.. இவர்களுக்கு 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. ஆனால், அசோக்கும் வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளதாகவும், இது தொடர்பாக தம்பதிக்குள் தகராறும் வந்து போனதாகவும் சொல்கிறார்கள்.

ஆண்களுடன் தொடர்பு: ரமணிக்கும் பல ஆண்களுடன் தொடர்பு இருந்து வந்ததால், இந்த தகராறு முற்றி, இறுதி கொலை வரை சென்றதாக கூறுகிறார்கள்.. இரும்பு கட்டியால் தலையிலேயே அடித்து கொன்றுள்ளார் அசோக்.. மனைவி ரத்த வெள்ளத்தில் பிணமானதுமே, 2 குழந்தைகளையும், தன்னுடைய அம்மாவிடம் விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றாராம்.

லட்சுமி அம்மாள் கதவை உடைக்கும்போதே துர்நாற்றம் வந்துள்ளது.. தனி அறையில், கட்டிலுக்கு அடியில் ரமணியின் சடலம் கிடந்துள்ளது. அவரது கழுத்தில் இருந்த 25 சவரன் நகைகள், வீடு உட்பட முக்கிய பத்திரங்கள் மாயமாகியிருந்ததும் தெரியவந்தது... இதற்குபிறகுதான், அசோக் கைதாகியிருக்கிறார். 2 நாட்களாகவே கள்ளக்குறிச்சியை இந்த பெண் அதிகாரியின் கொலை, உலுக்கி எடுத்து வருகிறது.

அதிர்ச்சி: இப்போது அசோக் கைதாகி கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், வங்கியின் பெண் அதிகாரிக்கு இத்தனை பேருடன் தொடர்பா? அதுவும், போலீஸ்காரர்களிடமே தகாத உறவா? என்று கள்ளக்குறிச்சி காவல்துறை வட்டாரமே அதிர்ந்து போய் கிடக்கிறதாம்.

அதுமட்டுமல்ல, தாசில்தார் ஒருவருடனும் ரமணி நெருக்கமாக இருந்தார்.. ஆண் நண்பர்களை வைத்தே மனைவிகள் கொலைசெய்யும் செய்திகளை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.

ஒருவேளை, அப்படி ரமணி என்னை கொலை செய்து விடுவாரோ என்று பயந்துதான், அவருக்கு முன்பு நான் முந்திக் கொண்டேன். பாலில் தூக்க மாத்திரையை கலந்து தந்து குடிக்க வைத்தேன்.. ரமணி தூங்கியதும் தலையனையை முகத்தில் அழுத்தி கொலை செய்துவிட்டு, குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டேன்" என்று பதைபதைக்க வைக்கும்படியான வாக்குமூலத்தை அசோக் சொல்லியிருக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+