Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உளுந்தூர்பேட்டையில் ஆனந்தன் வீட்டில் ஒரே கூட்டம்.. மனுஷனை போலவே மூஞ்சி! கள்ளக்குறிச்சியில் ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் ஒரு ஆட்டுக்குட்டி மனிதனை போலவே முகத்தை கொண்டு பிறந்திருந்தது இணையத்தில் வைரலானது.. மனிதனைப் போன்ற கண்கள், வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றைக் கொண்டிருந்தது. கண்களைச் சுற்றி ஒரு மனிதனின் கண்ணாடியை போன்ற கருப்பு வளையங்கள் இருந்தன. அதன் தலையில் அடர்த்தியான வெள்ளை ரோமங்கள் காணப்பட்டன.. அதன் கன்னத்தை சுற்றி தாடிபோன்ற தோற்றம் இருந்தது. இப்படியொரு ஆட்டுக்குட்டியை பார்த்து கிராம மக்கள் பயந்து போய்விட்டார்கள்.. அதுபோலவே, உளுந்தூர்பேட்டையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ளது சேந்தமங்கலம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ஆனந்தன்.. இவருக்கு 38 வயதாகிறது..

Kallakurichi Ulundurpet goat human face

இவர் தன்னுடைய வீட்டில் 20 ஆடுகளுக்கு மேல் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று நேற்று 2 குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு குட்டி சாதாரண ஆட்டு குட்டியை போல் இருந்தது. ஆனால் மற்றொன்று மனித முக தோற்றத்துடன் வித்தியாசமாக காணப்பட்டது.. ஆனால் பிறக்கும்போதே இறந்துதான் பிறந்தது.

வித்தியாசமான ஆட்டுக்குட்டி

மனித ரூபத்தில் ஆட்டுக்குட்டி பிறந்த தகவல் அதற்குள் சுற்றுவட்டாரத்தில் பரவியது.. சிறிது நேரத்திலேயே ஆனந்தன் வீட்டுக்கு ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்துவிட்டனர்.. இறந்து பிறந்த ஆட்டுக்குட்டியை அனைவரும் வியப்புடனும், ஆச்சர்யத்துடனும் பார்த்து சென்றனர். இந்த செய்திதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

இப்படி மனித தோற்றத்தில் ஆடுகள் பிறப்பது இது முதல்முறையல்ல.. பல முறை, பல இடங்களில், ஆடு, மாடு போன்றவை குட்டிகளை ஈனும்போது இதுபோன்று சில குட்டிகள் அபூர்வமான உருவத்தில் பிறப்பதுண்டு.

அபூர்வமான விலங்குகள்

இப்படி பிறக்கும் குட்டிகளை கிராம மக்கள் அபூர்வமானதாக கருதுகிறார்கள். பெரும்பாலும் இப்படி குறைபாட்டுடன் பிறக்கும் விலங்குகள் உயிர் பிழைப்பதில்லை. பல பிறக்கும்போதே இறந்துதான் வெளியே வருகின்றன.

சமீபத்தில் மேற்கு வங்காளத்தின் பர்தாமன் மாவட்டத்தில் ஒரு விகாரமான பசு பிறந்தது, வெறும் 4 மாதம் மட்டுமே உயிர்வாழ்ந்த அந்த பசுவை, உள்ளூர்வாசிகள் விழுந்து விழுந்து வணங்கினார்கள்.. அதேபோல, இதுபோன்ற விகாரமான விலங்குகள் கடவுளின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

மற்றொருபுறம் ஆடு, மாடுகள் இப்படி வினோத உருவத்தில் குட்டியை ஈன்றால், ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் என்றும் கிராம மக்கள் நம்புகிறார்கள்..

சைக்ளோபியா

ஆனால், மனித முகத்துடன் விலங்குகள் பிறப்பது பற்றி விஞ்ஞானிகள் சொல்லும்போது, "சைக்ளோபியா" என்று அழைக்கப்படும் ஒரு அரிய பிறவி குறைபாடு காரணமாக இந்த உருவ மாறுபாடு ஏற்படுகிறது. இதில் சாதாரண சூழ்நிலைகளில் முக சமச்சீர்மையை உருவாக்கும் மரபணுக்கள் தோல்வியடைகின்றன. பொதுவாக 16000 விலங்குகளில் ஒரு விலங்கு இப்படியான குறைபாட்டுடன் பிறக்கிறது. மனிதர்களிலும் இந்த குறைபாடு மிக அரிதாக காணப்படுகிறது" என்கிறார்கள்.

விலங்குடன் மனிதன் உறவு கொண்டால் இவ்வாறாக குட்டிகள் உருவாகும் என்ற கூற்றையும் மருத்துவர்கள் மறுக்கிறார்கள்.. காரணம், விலங்குகள் , மனிதன் இரண்டுமே வெவ்வேறு இனம் என்பதால், அதுபோன்ற இனப்பெருக்கத்துக்கே சாத்தியமில்லை என்கிறார்கள்.

அறிஞர்கள் சொல்வதென்ன?

கால்நடைகளில் "Fetal Anasartha: or Anasarca) கருவில் ஏற்படும் குறைபாட்டால் இத்தகைய தோற்றம் ஏற்படுவதாகவும், கருவில் நீர்கோர்த்து அவை முகம், கால்கள் என பகுதிகளை வீங்கச் செய்துவிடும்போது, இப்படியான ஆட்டுக்குட்டியின் முகம் வீங்கிப்போய் மனித ரூபத்தில் காணப்படுகிறது என்று விளக்கம் தருகிறார்கள்,.

எனினும், மருத்துவம் சொல்லும் இந்த காரணத்தை பலரும் ஏற்கவில்லை.. மனித முகத்துடன் பிறந்தது கடவுளின் அவதாரம் என்றும், ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதன் அறிகுறியாக கருதுகிறார்கள்.. அப்படித்தான் உளுந்தூர்பேட்டை ஆனந்தன் வீட்டில் இறந்த ஆட்டுக்குட்டியை பார்த்ததுமே, அடுத்து என்ன நடக்க போகிறதோ? என்று பீதியில் கிராம மக்கள் உறைந்து கிடக்கிறார்களாம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+