100 பெண்கள்.. கள்ளக்குறிச்சியே கலங்குது.. குமட்டுது ஆபாசம்.. இந்த சார் செஞ்ச வேலைய பாருங்க.. ஆண்டவா
கள்ளக்குறிச்சி: 100 பெண்களுக்கு மேல் சீரழித்துள்ளார் ஒரு இளைஞர்.. பலநாள் திருடன் ஒருநாள் வெளியே வந்துதானே ஆகணும்? இதோ இப்போது பொதுவெளியில் அம்பலமாகிவிட்டார்.
கைதாகி சிறையிலிருக்கும் நாகர்கோவில் காசியும், இப்படித்தான் பெண்களை சீரழித்தார். கல்லூரி மாணவிகள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளம்பெண்கள், வசதியான குடும்ப பெண்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை, தன் வலையில் சாய்த்தவர் நாகர்கோவில் காசி..

பெண்கள்: ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்படுத்தி அவர்களிடம் நெருங்கிப் பழகி, அதையும் வீடியோ எடுத்து மிரட்டி அந்த பெண்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை கறந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் காசி. 4 மாடிக்கு வீடு கட்டி இருக்கிறார்.. நிறைய சொத்துக்களையும் வாங்கி போட்டுள்ளார்.. 120 பெண்கள், 400 வீடியோக்கள், 1,900 ஆபாசப் படங்கள் அவரது லேப்டாப்பில் கைப்பற்றப்பட்டன..
எஸ்ஐ மகள் ஒருவரையும் தன் வலையில் வீழ்த்தியதாக சொன்னார்கள்.. ஒரு பிரபல நடிகரின் மகளும், காசியின் பிடியில் விழுந்துவிட்டதாக சொன்னார்கள்.. ஒரு அரசியல்வாதி மனைவியும் இவரது கட்டுப்பாட்டில் உள்ளதாக சொன்னார்கள்.. எனவே, இதுதொடர்பான உண்மைகள் விரைவில் வெளிவரக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட விஐபிக்கள், அரசியல் புள்ளிகள் கலக்கத்தில் இருந்ததாக, தகவல்கள் பரபரத்தன. ஆனால், அவர்கள் எல்லாம் யார் என்று கடைசிவரை தெரியவில்லை என்பது வேறுவிஷயம்.
நாகர்கோவில்: அனைத்து குற்றமும் நிரூபிக்கப்பட்டு, இப்போது நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையும் தரப்பட்டுள்ளது. காசியை போல காமுகர்களுக்கு கடுமையான தண்டனைகள் தரப்பட்டபோதிலும், நிறைய காசிகள் முளைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆரூர் என்ற கிராமத்தை அருண் பிரசாத்... கடந்த சில வருடங்களாகவே, இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக பெண்களை ஏமாற்றி வந்துள்ளார்.. கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகளிடம், ஆசை வார்த்தை கூறி அவர்களுடன் தனிமையில் இருந்து வந்ததாக தெரிகிறது. அப்படி தனிமையில் இருக்கும்போது, வீடியோக்களையும், போட்டோக்களையும் திருட்டுத்தனமாக எடுத்ததாக தெரிகிறது.
வீடியோ: அந்த வீடியோக்களை, சம்பந்தப்பட்ட பெண்களிடம் காட்டி, பணம் கேட்டு மிரட்டுவாராம்.. அவர்கள் பணம் கொடுக்கவில்லை என்றால், சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிடுவதாக சொல்லி பயமுறுத்துவாராம். இதற்கு பயந்தே பல பெண்கள், பணத்தை அருண் பிரசாத்துக்கு தந்துள்ளனர்.
அப்படித்தான், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம், பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், சங்கராபுரம் போலீசுக்கே போய்விட்டார். இந்த புகாரின்பேரில் போலீசார், அருணின் செல்போனை பறிமுதல் செய்தனர். ஆனால், அருணை கைது செய்யவில்லையாம்.. அவரை விசாரிக்கவும் இல்லையாம்..
அருண்பிரசாத்: இதனால் அந்த பகுதி மக்கள் கொந்தளித்து போய்விட்டார்கள்.. இப்போது அருண் அந்த ஏரியாவிலேயே இல்லையாம்.. எங்கே இருக்கிறார் என்றும் தெரியவில்லை.. சென்னையில் எங்கோ பதுங்கி இருப்பதாக சொல்கிறார்கள். அவர் இன்னும் ஒன்றிரண்டு நாளில் வெளிநாடு போக போகிறாராம். அதற்கான ஏற்பாடுகளும் நடந்துள்ளதாம். அதனால், உடனே குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலிய எழுப்பி வருகிறார்கள் அந்த பகுதி மக்கள்..!!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications