For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விழுப்புரம் வன்கொடுமை... தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை- கமல்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்ரீதேவி இல்லத்துக்கு போய்விட்டு வந்து கமல் அளித்த பேட்டி- வீடியோ

    சென்னை: விழுப்புரத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டது வேதனைக்குரியது என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாகவும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    துபாயில் மரணமடைந்த ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மும்பை சென்றார் கமல்ஹாசன். அவரது மகள் ஜானவி மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார். சட்டச் சிக்கல்களால் ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    Kamal expresses his anger over brutal physical attack on Villupuram girl

    மும்பையில் இருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்கொடுமை, சிறுவன் கொலை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக கூறினார்.

    சண்டிகரில் தமிழக மாணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி கேள்விக்கு பதிலளித்த கமல், மாணவர்கள் தற்கொலை செய்யக்கூடாது என்றார். மற்ற மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு தேவை என்று கூறிய கமல், எங்கே படித்தாலும் மாணவர்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் அது நல்ல நாடு என்றார்.

    முன்னதாக அவர், மும்பையில் ஸ்ரீதேவியின் மகளுக்கு ஆறுதல் கூறச் சென்றதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். சோகமான ஸ்ரீதேவியின் மரணம் பற்றி பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

    English summary
    Kamal Haasan has expressed his anger over the brutal physical attack on Villupuram Dalit girl.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X