நடிகர் கமல் முதலில் அரசியலுக்கு வரட்டும்.. பதில் சொல்றோம்.. எடப்பாடி பழனிச்சாமி

கமல்ஹாசன் ஒரு நடிகர்தான் அவர் அரசியலுக்கு வந்த பின்னர் அவரது கருத்துக்கு பதில் தருகிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கோவை: கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் ஏற்போம் என்றும் அப்போது கமல்ஹாசன் கருத்துக்கு தகுந்த கருத்தை தெரிவிப்போம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வில் விலக்கு அளிக்குமாறு மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றார். நீட் தேர்வில் விலக்கு கோரி பிரதமரை அமைச்சர்கள் சந்தித்துள்ளனர்.

Kamal haasan comes to politics says TN CM

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரைவாக திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்று கூறிய அவர் டெங்கு காய்ச்சலுக்கு எதிராக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் குறித்து பேசிய முதல்வர், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் ஏற்போம் என்றும் கமல்ஹாசன் கருத்துக்கு தகுந்த கருத்தை தெரிவிப்போம் என்றும் கூறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கமல் நடித்துக்கொண்டிருக்கிறார் அவருக்கு அரசியல் தெரியாது என்று பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. இன்று கமல் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று கூறினார்.

டெல்லியில் போராட்டம் நடத்துவது விவசாயிகளின் தனிப்பட்ட விருப்பம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி எங்கள் அணிக்கு வந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வோம் என்றார்.

கட்சியில் இருந்து சிலர் பிரிந்து சென்றிருந்தாலும் அணி ஒன்றுதான் என்று கூறிய முதல்வர், ஜெயலலிதா அறிவித்தபடியே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்படும் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+