போஸ்டரில் தம்மை கத்தியால் குத்தும் சிறுவர்கள் வீடியோவை வெளியிட்டு கமல் ஆவேச ட்வீட்

Written By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போஸ்டர் ஒன்றில் தமது முகத்தை கத்தியால் குத்தி குத்தி கிழிக்கும் கொலை வெறியூட்டப்பட்ட சிறுவர்களின் வீடியோவை முன்வைத்து ட்விட்டரில் ஆவேசமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Kamal Haasan's new tweet on Hindu Terror

கமல்ஹாசன் இன்று இரவு தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு இது:

என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன்

குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும்.

அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்.

இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டிருந்தார்.

எதற்காக கமல்ஹாசன் இதனை பதிவிட்டிருக்கிறார்? என்ன நடந்தது? என பலரும் விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த போது கமல்ஹாசன் மற்றொரு பகீர் பதிவை வெளியிட்டிருந்தார்.

இசை என்பவரது வீடியோவுடன் கூடிய ட்வீட்டர் பதிவை ரீட்விட் செய்து "புரியாதவர்க்கு புரியும்படியாய்" என அதில் குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன்.

இசை என்பவர் "இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது. மனம் பதறுகிறது. 😔 @ikamalhaasan நீங்கள் சொன்னதை சரியென்று நிறுவுகின்றனர்" என்ற குறிப்பிடுடன் பதிவிட்டுள்ள வீடியோ இதுதான்:

இதற்குதான் கமல்ஹாசன் பதற்றத்துடனும் ஆவேசத்துடன் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actort Kamal Haasan today also posted one more tweet on Hindu Terror in his page.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற