ஏற்கனவே தவறு செய்தவர்கள் என்னுடன் நிச்சயம் வரமுடியாது.. கமல்ஹாசனின் அஸ்திரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஏற்கனவே தவறு செய்தவர்கள் என்னுடன் நிச்சயம் வரமுடியாது..கமல்ஹாசனின் அஸ்திரம்!- வீடியோ

சென்னை : ஏற்கனவே தவறு செய்தவர்கள் என்னுடன் நிச்சயம் வரமுடியாது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும் நேர்மை தவறுவோருக்கு எதிராக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம் என்று கமல் எச்சரித்துள்ளார்.

தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாராய நகரில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தது போது பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தனது ஊழலுக்கு எதிரானவர்கள் கட்சியில் இடம்பெறாமல் இருப்பதை எவ்வாறு உறுதி செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

 Kamal Haasan says no place for old baggage politicians with him especially with corrupted persons

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் : சினிமா எடுப்பது சாமானியமான விஷயம் அல்ல. கடைநிலைஊழியர் செய்யும் தவறு என் சினிமாவை கெடுத்துவிடும். அவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் அல்லது அந்த தவறு நடக்காமல் மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்க வேண்டும்.

நல்ல படத்திற்கே அப்படியானால் அரசியல் என்பது எப்படி இருக்க வேண்டும். நான் எடுத்த திரைப்படங்கள் உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிக்கிறேன். அதை நெருங்கிக் கொண்டு இருக்கிறேன். ஊழல் செய்தவர்களை திரைப்படங்களில் என்ன செய்தேனோ அதைவிட கடுமையான விஷயத்தை நான் செய்வேன்.

நேர்மை தவறுவோருக்கு எதிராக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், முன்கூட்டியே ஊழல்வாதிகள் தடுக்கப்படுவார்கள். ஏற்கனவே தவறு செய்தவர்கள் என்னுடன் நிச்சயம் வரமுடியாது. 234 பேர் இருந்தாலும் பழைய பேக்கேஜூடன் வருபவர்களை எங்களுடன் சேர்த்துக் கொள்வது இல்லை என்பதே எங்களுடைய முதல் கெட்டிக்காரத்தனமாக பார்க்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamalhaasan says that there is no place for corrupted politiccians in his party and no persons will be allowed with the old politial baggages.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற