For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி நிருபர்கள் கேள்வி.. எஸ்கேப் ஆகாமல் பதில் சொன்ன கமல்ஹாசன்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கிறிஸ்துவ மிஷனரிகள் கமலுக்கு உதவி செய்கிறதா ? கமலின் பதில்

    ஈரோடு: பெண்கள் பாதுகாப்பு குறித்த நிருபர்கள் கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்தார். மேலும், ராஜிவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியது மனிதநேயம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

    கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்றும், இன்றும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். ஈரோட்டில் இன்று கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

     Kamal Haasan speaks out on women safety

    தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் கவலைக்குரியது. ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியது மனிதநேயம். அதேநேரம், வழக்கில் தொடர்புள்ள, 7 பேர் விடுதலை தொடர்பாக நாம் கேட்பது சட்டத்தின் தளர்வு என்றார் கமல்ஹாசன்.

    அரசியலில் வளர்ச்சி பெற சினிமா புகழ் மட்டும் போதாது என்றும் அவர் தெரிவித்தார்.

    ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை முழுமையாக, மன்னித்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். பிரபாகரன் கொல்லப்பட்டபோது அவருக்கும், அவர் குடும்பத்திற்காகவும் வருத்தப்பட்டதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    இதனிடையே ரஜினிகாந்த்திடம் நிருபர்கள், நேற்று, பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கியுள்ளது குறித்து கேட்ட கேள்விக்கு, பதிலளிக்க மறுத்து இமயமலைக்கு கிளம்பி சென்றார். இது விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

    English summary
    Kamal Haasan said forgiven Rajiv Gandhi's killers shows Rahul Gandhi's humanities And answers on women safety.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X