நம் கலாசார விஷயத்தில் கமல் வீக்தான்... சீண்டிக் கொண்டே இருக்கும் எச்.ராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நதிகளை தெய்வமாக கும்பிடுவது நம் கலாசாரம் என்றும் கலாசார விஷயத்தில் கமல் வீக்தான் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்திலிருந்தே எச். ராஜாவுக்கும், நடிகர் கமல் ஹாசனுக்கும் 7-ஆம் பொருத்தம்தான். நடிகர் கமல் டுவிட்டரில் பதிவிடும் கருத்துகளுக்கு சர்ச்சைக்குரிய வகையில் பதிலடி கொடுப்பதே எச்.ராஜாவுக்கு வாடிக்கையாக உள்ளது.

கமல் அரசியலுக்கு வர தகுதியற்றவர் என்ற கருத்தையும் எச்.ராஜா முன்வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு எண்ணூர் கழிமுகத் துவாரத்தை நடிகர் கமல் பார்வையிட்டார்.

ஆறே காணாமல் போய்விட்டது

ஆறே காணாமல் போய்விட்டது

இதையடுத்து அடையாறில் நேற்று விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்தார். அப்போது கமல் பேசுகையில் தமிழகத்தில் இருக்கும் நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகின்றன. ஒரு ஆறே காணாமல் போய்விட்டது. அதுகுறித்து விரைவில் தகவல் வெளியே வரும்.

குறும்படம் வெளியீடு

குறும்படம் வெளியீடு

அந்த காணாமல் போன ஆறு குறித்து விரைவில் ஆதாரங்களை வெளியிடுவேன். ஏரி, குளங்களை சாமியாக வழிப்படுங்கள் என்று கமல் கூறினார். இதையடுத்து மத்திய- மாநில அரசுகளை பாரபட்சமின்றி விமர்சித்தார்.

அரசியல் பிரவேசம்

அரசியல் பிரவேசம்

கமல்ஹாசன் அடுத்தடுத்த செயல்பாடுகள் அரசியலுக்கு அவர் வருவதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அவரது செய்கைகளால் சில அரசியல்வாதிகள் அச்சத்தில் உள்ளனர்.

டுவிட்டரில் பதிலடி

கமலின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், கங்கைக்கு ஆரத்தி எடுத்து கும்பிட்டு தான் மோடி ஜி பதவியேற்றார். நதிகளை தெய்வமாக கும்பிடுவது நம்கலாச்சாரம்.கலாச்சார விஷயத்தில் கமல் வீக் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP National Secretary H.Raja says that PM Modi prayed Ganga by taking Arthi , this is our culture and Kamal hassan is weak in our culture.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற