விஸ்வரூபம் போலதான் காலாவும்.. கமல் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்.. கேள்வி கேட்ட பிரகாஷ்ராஜ்

சென்னை: விஸ்வரூபம் படத்திற்காக கஷ்டப்பட்ட கமல்ஹாசன் காலா படம் பற்றி பேசாமல் இருப்பது மிகவும் தவறானது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனைக்காக கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பெங்களூர் சென்று இருந்தார். இந்த சந்திப்பில் அவர் காலா படம் குறித்து எதுவும் பேசவில்லை. இது பெரிய அளவில் சர்ச்சையை உருவாக்கியது. கர்நாடகாவில் காலா படம் தடை செய்யப்பட்டுள்ளது.

காலா படத்தை பற்றி கர்நாடக முதல்வரிடம் பேசவில்லை, காலாவை விட காவிரி முக்கியம் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் கமலின் கருத்திற்கு அவர் கன்னடம் தெரிவித்துள்ளார்.
காலா பிரச்சனை குறித்து பேசாததற்கு கமல் என்ன காரணம் வேன்றுமென்றாலும் கூறலாம். ஆனால் விஸ்வரூபம் படம் பிரச்சனை ஆன போது அதை பெரிதாக்கியது கமல்ஹாசன்தான். அவர்தான் உலகமே அவர் பக்கம் நிற்க வேண்டும் என்பது போல பேசினார். ஆனால் இப்போது காலாவிற்காக அவர் குரல் கொடுக்கவில்லை.
ஆனால் நான் குரல் கொடுப்பேன். எந்த ஒரு படத்திற்காகவும் பேசுவது என்னுடைய கடமை. காங்கிரஸ், பாஜக, மஜத என ஆட்சியில் இருந்தாலும் கருத்துரிமையை பாதுகாக்க வேண்டியது அவர்களின் கடமை. அமைதியாக சமூக விரோதிகள் செய்வதை பார்த்துக் கொண்டு இருக்க கூடாது. ஒரு படத்தை வெளியிடவிடாமல் தடுப்பது தவறு, பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் இருக்க வேண்டியதுதானே என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!