தமிழர்களை ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறாரா கமல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர்களை ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ரீதியில் கமல் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்து நடிகர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Kamal slam Hindu organization members who filed complained against him

கமல் குறித்து போலீசில் புகார் அளித்துள்ள இந்து அமைப்பினர் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறுகையில், இவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள்தான். ஒருவேளை ஹிந்தி தெரியாமல் எதிர்க்காமல் இருந்திருக்கலாம். கன்னடத்திலும் பிக்பாஸ் வந்துள்ளது. அதுவும் இவர்களுக்கு தெரியவில்லை. இவர்கள் இந்திய கலாசாரம் ற்றி பேசுகிறார்கள், ஆனால் இந்தியாவை புரிந்துகொள்ளவில்லை.

தசாவதாரம் எடுக்கும்போது இவர்கள் கொண்டாடினர். இப்போது விஸ்வரூபம் எடுத்தால் பிடிக்காது. இவர்களும் எனக்கு ரசிகர்கள்தான் என நான் நினைத்துக்கொண்டுள்ளேன். என்னை சிறையில் தள்ளி பார்க்க விரும்பும் ரசிகர்கள் இவர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதன்மூலம் ஹிந்தி தெரியாதது ஒரு குற்றச்செயல் என்பதை போல பிம்பத்தை உருவாக்கியுள்ளார் கமல். குறைந்தது தேசியம் பற்றி பேசும், தமிழக இந்து அமைப்புகளாவது ஹிந்தியை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூற வருகிறார்.

தமிழ் நிகழ்ச்சியில், தமிழகத்திற்கு உரிய கலாசாரம் மீறப்படும்போது அதை கேள்வி கேட்கவோ, புகார் தெரிவிக்கவோ உரிமையில்லை என்ற தொனியில் கேலி செய்துள்ளார் கமல்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal slam Hindu organization members who filed complained against him for Biggboss.
Please Wait while comments are loading...