கால்வாய் ஆக்கிரமிப்புகளை அடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கும் காஞ்சிபுரம் கலெக்டர் கெஜலட்சுமி

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: பெரும் மழையும், அதைத் தொடர்ந்து வந்த பெரும் வெள்ளத்தாலும் சென்னையைப் போலவே காஞ்சிபுரம் மாவட்டமும் பலத்த சேதத்தைக் கண்டுள்ளது. சென்னையை விட அதிக அளவிலான மழை காஞ்சிபுரம் மாவட்டத்தில்தான் பெய்தது. ஆனால் ஏரிகள் நிரம்பியதால் அதிலிருந்து வெளியேறிய தண்ணீர்தான் ஊரையே அழித்து விட்டது. இதற்குக் காரணம் மழை நீர்க் கால்வாய்கள், ஏரிகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகள், கட்டடங்கள்தான். இப்போது அதற்கு சரியா ஆப்பு வைத்து வருகிறார் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கெஜலட்சுமி.

குறிப்பாக தாம்பரம் வட்டத்தில் அவர் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆரம்பித்துள்ளார். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால்தான் இப்பகுதியில் மிகப் பெரிய அளவில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது கலெக்டரின் செயல்பாடுகளால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேசமயம், ஆக்கிரமிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி கலெக்டரை முடக்கவும் முடியவில்லை. காரணம், எதையும் கண்டு கொள்ளாமல் தைரியலட்சுமியாக மாறி அவர் செயல்பட்டு வருவதால்.

அடையாற்று வெள்ளம்

அடையாற்று வெள்ளம்

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்புதான் சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பெரும் வெள்ளக்காடாக்கி விட்டது. நீர் திறப்பு சரியான முறையில் திட்டமிடப்படாததே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டாலும் கூட ஆக்கிரமிப்புகள்தான் மிக முக்கியமான காரணமாகும்.

கால்வாய்களைத் தின்ற கயவர்கள்

கால்வாய்களைத் தின்ற கயவர்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்திலும், சென்னை மாவட்டத்திலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் கால்வாய்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால்தான் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் ஊருக்குள் புகுந்து விட்டது.

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

இந்த நிலையில் தாம்பரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுத்த கலெக்டர் கெஜலட்சுமி அவற்றை அகற்ற உத்தரவிட்டார். உத்தரவிட்டதோடு நில்லாமல் அவரே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை நேரில் வந்து பார்வையிடுகிறார்.

முடிச்சூர் ஆக்கிரமிப்பு

முடிச்சூர் ஆக்கிரமிப்பு

தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் மணிமங்கலம், வரதராஜபுரம் பகுதியிலிருந்து மழை நீர் வெளியேறி அடையாறு கால்வாயில் சேர இந்தப் பகுதியில் மிகப்பெரிய கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் நீளம் 14 கி.மீ. நீளம் உள்ளது. அகலம் 60 மீட்டராகும். இதில் அகலத்தை மட்டும் ஆக்கிரமிப்பாளர்கள் சுருக்கி 18 மீட்டராக சுருக்கி விட்டனர்.

பெரும் பாதிப்பு

பெரும் பாதிப்பு

இப்படி மிகப் பெரிய அளவில் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டதால்தான் பலத்த மழை பெய்து ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டபோது பெரும் பாதிப்பை இப்பகுதி மக்கள் சந்தித்தர். இதனை ஆய்வு செய்த கலெக்டர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், காம்பவுன்ட்டு சுவர்கள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டார். தற்போது அவை இடிக்கப்பட்டு வருகின்றன.

அடுக்கு மாடிக் குடியிருப்புகளும் காலி

அடுக்கு மாடிக் குடியிருப்புகளும் காலி

கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடிக் கட்டடங்களையும் இடித்துத் தள்ள கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அவையும் இடிக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் கெஜலட்சுமியின் அதிரடி பணியில் வெள்ள பாதிப்பு நிவாரண அதிகாரி அமுதாவும் உடன் இருக்கிறார். இருவரும் சேர்ந்து யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக செயல்பட்டு வருகின்றனர்.

அடாத மழையிலும்

அடாத மழையிலும்

அடாத மழையிலும் இதுவரை 7 கி.மீ. தூரத்திற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டது. பல அடுக்குமாடிக்கட்டி டங்கள் எல்லாம் இடிக்கப்பட்டு விட்டது. இந்தப் பகுதியில் கால்வாய் பார்ப்பதற்கு இப்போது பெரிதாக காட்சி தருகிறது. மேலும் அப்பகுதியில் வடியாமல் இருந்து வந்த மழை நீரும் வேகமாக வடிந்து வருகிறது.

இப்போது மட்டுமல்ல

இப்போது மட்டுமல்ல

கெஜலட்சுமி சமீபத்தில்தான் காஞ்சிபுரம் கலெக்டராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்றது முதலே அவர் அதிரடியாகத்தான் செயல்பட்டு வருகிறாராம். மக்களுக்கு உரிய திட்டங்கள் சரியாக போய் சேருவதை அவர் உறுதி செய்கிறாராம். தற்போது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் மீது கை வைத்துள்ளார் கலெக்டர்.

ஒரு ஆக்கிரமிப்பையும் விட மாட்டோம்

ஒரு ஆக்கிரமிப்பையும் விட மாட்டோம்

இதுகுறித்து கலெக்டர் கெஜலட்சுமி கூறுகையில், அடையாற்றில், பெருங்களத்துார், அம்பேத்கர் நகர் பகுதியில், 124 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. இதன் மூலம், 7.5 ஏக்கர் அளவிலான பொதுப்பணி துறை இடம் மீட்கப்பட்டது. இதனால் கால்வாயின் அகலம் 60 மீட்டராக அதிகரித்துள்ளது. பி.டி.சி., குவாட்டர்ஸ், வரதராஜபுரம் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவோம் என்றார்.

சென்னை மாநகராட்சி விழிக்குமா?

சென்னை மாநகராட்சி விழிக்குமா?

காஞ்சிபுரம் கலெக்டரின் இந்த செயலானது சென்னை மக்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதேபோல சென்னை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் அதிரடியாக செயல்பட்டு இங்குள்ள ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக பாரபட்சம் இல்லாமல் அகற்றினால் வெள்ள சேதத்தை எதிர்காலத்தில் பெருமளவில் தடுக்க முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

இறையன்புவுக்குப் பிறகு

இறையன்புவுக்குப் பிறகு

முன்பு இறையன்பு காஞ்சிபுரம் கலெக்டராக இருந்தபோது இப்படித்தான் அதிரடியாக செயல்பட்டார். மிகச் சிறந்த செயல்பாடுகளால் மக்களின் ஏகோபித்த அன்பையும் ஆதரவையும் பெற்றார். அவரை அரசியல் நெருக்கடிகள் காரணமாக இடமாற்றம் செய்தபோது அதற்காக மக்கள் போராட்டங்களிலும் குதித்தனர். இப்போது இன்னொரு அருமைாயன கலெக்டர் வந்துள்ளார். நல்லபடியாக செயல்பட இந்த அரசியல்வாதிகள் விடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+