கந்த சஷ்டி விழா: முருகன் ஆலயங்களில் கோலாகலத் தொடக்கம் - நவ.17ல் சூரசம்ஹாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு நடைபெறும் விழாக்களில் எல்லாம் முதன்மையானது கந்தசஷ்டி விழாவாகும். சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவோருக்கு கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். முருகப்பெருமான் ஆலயங்களில் கந்த சஷ்டி விழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.

அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று துவங்குகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 5.15 மணிக்குமேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார்.

கந்த சஷ்டி விழாவில் விரதம் இருக்க தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோயில் உள் மற்றும் வெளி பிரகாரங்கள், விடுதிகளில் தங்கி விரதம் இருந்து சுவாமியை தரிசிப்பார்கள் இதனால் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரம்சம்ஹாரம் வரும் 17ம் தேதி நடக்கிறது.

சஷ்டி விரதம்

சஷ்டி விரதம்

தேவர்களை துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்வதற்காக சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணில் இருந்து 6 தீப்பொறிகளை உண்டாக்க, அவை சரவணப் பொய்கையில் விழுந்து, குழந்தைகளாக மாறின. அந்த குழந்தைகளை பார்வதி தேவி, சேர்த்து அணைக்க, 6 முகமும், பன்னிரு கைகளுமாக ஒரே உருவம் பெற்று, கந்தன் என அக்குழந்தை பெயர் பெற்றது.

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்

சக்தி வேலுடன் கந்தன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து, தேவர்களை காப்பாற்றியதாக புராணம். இதன் அடிப்படையில், ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாளான வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாள் கந்தசஷ்டி கடைபிடிக்கப்படுகிறது. 6ம் நாளான சஷ்டி அன்று முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நடத்தப்படுவது வழக்கம்.

திருச்செந்தூரில் பக்தர்கள்

திருச்செந்தூரில் பக்தர்கள்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி,6 நாட்கள் விரதம் இருக்கும் முருக பக்தர்கள், கோயில் வளாகம் மற்றும் சஷ்டி மண்டபம் ஆகிய இடங்களில் அமர்ந்து, விரதத்தை தொடங்கினர்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன், கந்தசஷ்டி விழா தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் தங்கி, காப்பு கட்டுதலுடன் சஷ்டி விரதத்தை தொடங்கினர்.

வயலூர் முருகன்

வயலூர் முருகன்

திருச்சியை அடுத்த குமார வயலூரில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கி வருகிற 18ம்தேதி நடைபெற உள்ளது. இன்று காலை 9 மணிக்கு சுப்பிரமணியசாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு சிங்காரவேலர் பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

விரலிமலையில் விரதம்

விரலிமலையில் விரதம்

இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அருணகிரிநாதரால் பாடல் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க புராதன வழிபாட்டு தலமான விராலிமலை சுப்பிரமணியசாமி கோவிலிலும் கந்த சஷ்டி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

17ம்தேதி சூரசம்காரம்

17ம்தேதி சூரசம்காரம்

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக 16ம் தேதி வேல்வாங்குதல் நிகழ்ச்சியும், 17ம் தேதி சூரசம்ஹாரமும், 18ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும், திருச்செந்தூர், திருப்பரங்குன்றத்திற்கு வந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+