கனிமொழியை சந்தித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன்! எதற்காக இந்த திடீர் மீட்டிங்? என்ன பின்னணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.

இந்தச் சந்திப்பின் போது அரசியல் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்பதும் தனிப்பட்ட முறையிலான சந்திப்பும் என்பதும் கவனிக்கத்தக்கது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி கணவர்

கனிமொழி கணவர்

திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் பலனாக உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு ஷிஃப்ட் செய்யப்பட்டார்.

அப்போலோ ஹாஸ்பிடல்

அப்போலோ ஹாஸ்பிடல்

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கனிமொழியின் கணவர் அரவிந்தனுக்கு ஏற்கனவே சிங்கப்பூரில் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை ஒட்டியும், தேவையான புதிய பரிசோதனைகளின் அடிப்படையிலும் மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது. கணவரை மருத்துவமனையிலிருந்து கவனித்துக் கொள்கிறார் கனிமொழி. இதன் காரணமாக தான் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை.

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சவுந்தரராஜன்

கனிமொழியின் கணவர் அரவிந்தன் உடல்நலம் பற்றி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது கேட்டறிந்து கொள்கிறார். அதுமட்டுமல்ல தனது தங்கை கனிமொழிக்கும் தைரியம் அளித்து வருகிறார். இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கனிமொழியை நேரில் சந்தித்து அரவிந்தன் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார்.

நலம் விசாரிப்பு

நலம் விசாரிப்பு

மேலும், கனிமொழிக்கு தைரியமும் வழங்கியிருக்கிறார். இதனிடையே தமிழிசையுடன் சென்ற அவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜனும் அப்போலோவில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்து தனக்கு தெரிந்த சில மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+