கர்நாடகா வங்கி ஏடிஎம் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. நெல்லையில் பரபரப்பு! #cauvery
நெல்லை: பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள கர்நாடகா வங்கி நேற்று நள்ளிரவில் தாக்கப்பட்டதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் விட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான போராட்டம் நடந்தது. இதையொட்டி பஸ்கள் மற்றும் வாகனங்கள் கணக்கில்லாமல் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

தமிழகத்திலும் கன்னடர்களுக்கு எதிரான போராட்டங்களை தவிர்க்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் உள்ள கர்நாடக வங்கிகள் மற்றும் ஏடிஎம்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் கர்நாடகாவில் போராட்டம் தணிந்ததை தொடர்ந்து கர்நாடகா வங்கிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் எதிரே உள்ள கர்நாடகா வங்கி ஏடிஎம்மை நள்ளிரவு மர்ம நபர்கள் கல் வீசி தாக்கி சேதப்படுத்தி உளளனர். இதனால் மையத்தின் கண்ணாடி சேதம் அடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications