கர்நாடக காங்கிரஸ் தமிழகத்தைப் பழிவாங்குகிறது.. பொன். ராதாகிருஷ்ணன் பரபரப புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தருமபுரி: கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கிறது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்தை பழிவாங்குவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியாதாவது, காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தமிழகத்தின் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார்.

திமுகவும், காங்கிரசும்..

திமுகவும், காங்கிரசும்..

ஆனால் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் தி.மு.க.வும், காங்கிரசும் கைகோர்த்து செயல்படுகின்றன என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தை பழிவாங்குகிறது

தமிழகத்தை பழிவாங்குகிறது

இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீர் கிடைக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்தை பழிவாங்குகிறது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

மாநில அரசு தவறிவிட்டது

மாநில அரசு தவறிவிட்டது

தண்ணீர் கிடைக்காதபோது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்கவில்லை.பருவமழை பொய்த்தால் தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்படுகிறது.

முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்

முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்

இதை தவிர்க்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை. எதிர்காலத்தில், வறட்சியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் செயல் திட்டங்களை தீட்டி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Union Minister Pon.Radha Krishnan said that the Congress government in Karnataka is refusing to provide water to Tamil Nadu. He has accused Karnataka government is taking revenge for the political reasons.
Please Wait while comments are loading...