நிவாரணப் உதவிகளை செய்யவிடாமல் அதிமுகவினர் தடுக்கிறார்கள்: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை: பல்வேறு இடங்களில் நிவாரண உதவிகளை ஒழுங்காக செய்யவிடாமல் அதிமுகவினர் தடுத்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பின. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழைக்கு பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.

விடாது மழை பெய்து வந்ததால் சென்னை நகரமே தனித் தீவாக மாறியது. பல இடங்களில் உணவு, குடிதண்ணீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், நடிகர், நடிகைகள் தாமாக முன்வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் சென்னை அண்ணா அறிவாலத்திற்கு இன்று வந்து சேர்ந்தது. அதனை கருணாநிதி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில், வெள்ள நிவாரணப் பொருள்களையெல்லாம் தடுக்கிறார்கள். தொண்டு நிறுவனத்தினர் கொண்டு வருகின்ற பொருள்களை எல்லாம் தடுத்து அதிலே முதலமைச்சர் ஜெயலலிதாவின் படங்களை ஒட்டி அனுப்புகிறார்கள். இதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, இதைப் பற்றி நான் ஒன்றும் நினைக்கவில்லை. இப்படி நடந்து கொள்வது என்பது அவர்களுடைய சுபாவத்தைக் காட்டுகிறது. அவர்களும் உதவி செய்ய மாட்டார்கள். இரக்கம் கொண்டு உதவி செய்பவர்களின் பணிகளையும் அவர்கள் ஒழுங்காகச் செய்ய விடமாட்டார்கள். அது தான் அவர்கள் (அ.தி.மு.க.). இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications