காவேரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் கருணாநிதி... மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கருணாநிதி- கண்ணீர் விட்ட ஸ்டாலின்- வீடியோ

    சென்னை: இன்று நள்ளிரவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிகவும் மோசமானதால் அவர் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துவிட்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

    Karunanidhi critical, rushed to hospital past midnight

    கருணாநிதிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார். கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால் மற்றும் காவேரி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினரும் வந்தனர். அவரை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டதையடுத்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

    மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட கருணாநிதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உடனடி சிகிச்சையின் பலனாக கருணாநிதியின் நாடித் துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியது. தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

    மு.க.அழகிரி, ஸ்டாலின், ராசாத்தி அம்மாள், கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தினரும் மருத்துவமனையில் உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+