ஆர்.எம்.வீரப்பனின் 90வது பிறந்தநாள்... கருணாநிதி, ஸ்டாலின், ரஜினி நேரில் வாழ்த்து
சென்னை: முன்னாள் அமைச்சரும், பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இதையடுத்து அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர் ஆர்.எம்.வீ.என அழைக்கப்படும் இராம. வீரப்பன். இவர் கடந்த 1977 - 1986 வரை இருமுறை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும், இருமுறை திருநெல்வேலி மற்றும் காங்கேயம் தொகுதிகளில் இருந்து தேர்வாகி தமிழக சட்டசபை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரின் அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
அரசியல் மட்டுமின்றி சினிமாவிலும் பிரபலமான தயாரிப்பாளராக திகழ்ந்தவர் ஆர்.எம்.வீ. சத்யா மூவிஸ் இவரது குடும்ப தயாரிப்பு நிறுவனம் ஆகும். சத்யா மூவிஸ் மூலம் எம்.ஜி.ஆர்., ரஜினி உள்பட பல்வேறு நடிகர்களின் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடினார் ஆர்.எம்.வீ. வீட்டிலேயே பிறந்தநாள் கொண்டாடிய ஆர்.எம்.வீ.யை அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் நேரிலும், போனிலும் வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், ஜெகத்ரட்சகன், வைரமுத்து உள்ளிட்டோர் ஆர்.எம்.வீ.யை நேரில் சென்று வாழ்த்தினர்.
நடிகர் ரஜினிகாந்த்தும் ஆர்.எம். வீரப்பனை நேரில் சந்தித்து, காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications