முரசொலி அலுவலகத்தைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி திடீர் விசிட்- தொண்டர்கள் மகிழ்ச்சி!
ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை தந்தார்.
சென்னை : ஓராண்டு காலத்துக்கு பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று இரவு வருகை தந்தார். இதனால் திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஓராண்டு காலமாக உடல்நிலை சரியில்லை. இதனால் கட்சி பணிகளில் நேரடியாக ஈடுபடுவது, அண்ணா அறிவாலயத்துக்கு செல்வது, முரசொலி அலுவலகம் செல்வது, பொது விழாக்களில் பங்கேற்பது ஆகியவற்றை நிறுத்திக் கொண்டார்.
இந்நிலையில் அண்மையில் முரசொலி பவள விழாவிலும் கூட அவர் கலந்து கொள்ள மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. தற்போது அவரது உடல்நலம் சற்று தேறி வருகிறது.

கண்காட்சி அரங்கு
இதையடுத்து முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி சென்றிருந்தார். அங்கு முரசொலி பவள விழா கண்காட்சி அரங்கை பார்வையிட்டார்.

வாசல் வரை வந்த கருணாநிதி
இதையடுத்து கடந்த மாதம் சென்னை தினத்தந்தி பவள விழாவுக்கு சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர், மோடி புறப்பட்டதும் வாசல் வரை கருணாநிதியை உறவினர்கள் அழைத்து வந்தனர்.

கையசைத்தார் கருணாநிதி
அப்போது அங்கிருந்த தொண்டர்களை பார்த்து புன்னகையிட்ட கருணாநிதி அவர்களை பார்த்து கையசைத்தார். கடந்த சில நாட்களாகவே கருணாநிதி, அண்ணா அறிவாலயம் வருகை தர உள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்தன.

இன்று அண்ணா அறிவாலயம்
நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் இதை பதிவு செய்திருந்தது. கருணாநிதி அமருவதற்காக அவரது அறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று இரவு அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி வருகை தந்தார்.
|
ஆர்.கே.நகர் தேர்தல் களத்துக்கும்...
அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு வீடு திரும்பினார். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் களத்துக்கும் கருணாநிதி அழைத்து வரப்பட இருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications