முரசொலி பவளவிழா கண்காட்சியில் ஒவ்வொரு அரங்காக 40 நிமிடம் பார்வையிட்ட கருணாநிதி!
முரசொலி பவளவிழா கண்காட்சியில் ஒவ்வொரு அரங்காக திமுக தலைவர் கருணாநிதி நேற்று பார்வையிட்டார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு முரசொலி பவள விழா கண்காட்சியின் ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட்டு நெகிழ்ந்தார்.
முதுமையாலும் உடல்நலக் குறைவாலும் கடந்த ஓராண்டாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார் கருணாநிதி. கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி முரசொலி மாறன் பிறந்த நாளன்று முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்தார்.

உடல்நலம் தேறிய கருணாநிதி
அதன் பின்னர் உடல்நலக் குறைவால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல்வீட்டிலே சிகிச்சை பெற்று வந்தார் கருணாநிதி. தற்போது உடல்நலம் தேறிய நிலையில் நேற்று இரவு முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்தார்.

வீல்சேரில் அமர்ந்தபடியே...
முரசொலி செல்வமும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கருணாநிதியை வரவேற்று அழைத்து சென்றனர். வீல்சேரில் அமர்ந்தபடியே முரசொலி பவள விழா கண்காட்சியின் ஒவ்வொரு அரங்கையும் கருணாநிதி பார்வையிட்டார்.

மெழுகு சிலை
முரசொலியின் பழைய கால கட்டிடங்கள், அந்தக் காலத்து அச்சு இயந்திரங்கள், சட்டசபையில் முரசொலி செல்வத்தை கூண்டில் ஏற்றிய காட்சிகள், பழைய முரசொலி முக்கிய செய்திகளின் தொகுப்புகளை கருணாநிதி பார்வையிட்டார். மேலும் தாம் அமர்ந்திருப்பது போன்ற மெழுகு சிலை உள்ள அறைக்குச் சென்றும் கருணாநிதி பார்வையிட்டார்.

40 நிமிட நேரம்...
கண்காட்சி அரங்கைவிட்டு வெளியே வந்த கருணாநிதி, முரசொலி மாறன் சிலையையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். சுமார் 40 நிமிடங்கள் முரசொலி அலுவலக வளாகத்தைப் பார்வையிட்ட பின்னர் கருணாநிதி புறப்பட்டுச் சென்றார்.

பொதுநிகழ்வில் பங்கேற்கும் கருணாநிதி
ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலம் தேறிய நிலையில் கருணாநிதி பொதுநிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் வெளியே வந்திருக்கிறார். கருணாநிதி முரசொலி அலுவலகத்துக்கு வந்து சென்றது திமுக தொண்டர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications