கருணாநிதி கொடுத்த டிவி பெண்களை அழவைக்கிறது… நாஞ்சில் சம்பத்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதி கொடுத்த இலவச தொலைக்காட்சிப்பெட்டி வீட்டில் உள்ள பெண்களை கண்ணீர் சிந்த வைக்கிறது அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நடைபெற்று வருகின்றன. வேட்பாளர்கள் வாக்கு கேட்பது சில சமயம் சுவாரஸ்யமாக இருந்தாலும், பேச்சாளர்களின் பேச்சும் சில சமயம் சுவாரஸ்யமாக இருக்கும்.

அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வரும் நாஞ்சில் சம்பத் முன்பெல்லாம் காலில் விழாத குறையாக கெஞ்சி கெஞ்சி வாக்கு சேகரித்து வந்தார். சில சமயம் எதிர்கட்சிக்காரர்களை திட்டித் தீர்ப்பார், சமீப காலமாக நகைச்சுவை கலந்த பாணியில் பேசி அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார்.

துக்கவீடுதான்

துக்கவீடுதான்

ஒப்பாரி சத்தம் கேட்டால் அதை துக்கவீடுன்னு நினைச்சுக்கலாம். ஆனா ஒரு வீட்ல பொம்பளைங்க மட்டும் அழுதா... அது டிவி சீரியல் பாத்துதான்னு புரிஞ்சிக்கணும்.

டிவி கொடுத்து கெடுத்துட்டாங்க

டிவி கொடுத்து கெடுத்துட்டாங்க

டிவி இருந்தாலும் பரவாயில்லை இந்த வச்சிக்கங்க என்று இலவசமாக டிவி கொடுத்து எல்லோரையும் சீரியல் பார்க்க வைக்கிறாங்க. ஆண்களுக்கு சோறு கூட கிடைக்க மாட்டேங்குது.

திட்டிய மனைவி

திட்டிய மனைவி

ஒரு வீட்டில் வெளியில் போய்விட்டு வந்த கணவன், வீட்டிற்குள் போனான், அப்போது அவன் மனைவி அவனை திட்டித்தீர்த்தால். உனக்கு வேட்டி எதற்கு, நீயெல்லாம் சரியான ஆணா... ஒரு முருக்கு வாங்கத் தெரிகிறதா? என்றெல்லாம் திட்டி தீர்த்தாள் அந்த மனைவி.

அட கொசுவர்த்திப்பா…

அட கொசுவர்த்திப்பா…

ஒன்றும் புரியாமல் விழித்த மனைவி, நான் எங்கே முருக்கு வாங்கிக்கொண்டு வந்தேன்? ஒன்றும் புரியவில்லையே என்று கேட்டவாரே, மனைவி சாப்பிட்ட டப்பாவை திறந்து பார்த்தான். அடக் கொடுமையே முருக்கு சாப்பிடுறேன்னு டிவியை பார்த்துக் கொண்டே கொசுவர்த்தியை தின்று விட்டு என்னை திட்டுகிறாயே என்று கணவன் பதிலுக்கு திட்டவே மயங்கி விழுந்தாள் மனைவி.

டிவி படுத்தும் பாடு

டிவி படுத்தும் பாடு

குடும்ப ஒற்றுமை குலைக்கிறது கருணாநிதி கொடுத்த இலவச டிவி. அதே சமயம் ஜெயலலிதா கொடுத்த ஆடு, மாடு குடும்பத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது என்று சுவாரஸ்யமாக பேசி கைத்தட்டல் வாங்கினார் நாஞ்சில் சம்பத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+