விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்
விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை: விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் 'திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்து தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் அவரது காலடி படாத ஊர்களே இல்லை. அவரது லட்சிய முழக்கம் எதிரொலிக்காத இடங்களே இல்லை என்று வியந்து போற்றும் அளவுக்கு அரும்பணி ஆற்றிய, நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் அன்புத் துணைவியார், டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் அவர்கள் நேற்று மறைந்த செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
காங்கிரஸ் கட்சி ஆட்சி தமிழகத்தில் நடைபெற்ற போது, திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலும் சரி, அதற்குப்பின் தி.மு.கழகம் ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்ற நேரத்திலும் சரி அம்மையார் அவர்கள் திறம்பட அரசுப்பணி ஆற்றியவர்; என்றைக்கும் திராவிட இயக்க உணர்வோடு இயங்கியவர். அவரது மறைவால் வருந்தும் அவருடைய குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ' என தெரிவித்துள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications